Breaking
Wed. Apr 24th, 2024

நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே (17), அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஐந்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை கட்சிகள் 60 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்து ஜனாதிபதியாக்கினோம்.

ஜனநாயகத்தை தனது அரசியல் வரலாற்றில் இருந்து சீர்குலைத்து கடந்த இரு மாதங்கள் பல பின்னடைவுகளை இலங்கை தேசம் கண்டுகொண்டது. அபிவிருத்திகள் முடக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான இடைக்காலத் தடை என பல அரசியல் குழப்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்கான தீர்வை பொறுமையோடு போராடிய போது, பொறுமைக்கு கிடைத்த வெற்றியே இது. நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது. நீதி நாட்டில் உயிர் வாழ்கிறது .

நாடாளுமன்றத்தின் உள்ளே சபாநாயகரும் வெளியே நீதிமன்றமும் சட்டத்தை பாதுகாத்து அரசியல் சாசனத்தின் படி உறுதியான தீர்ப்பு வெளிப்படையாக வெளிக்காட்டப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தின் ஊடாக பல்வேறு பொருளாதார முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும். நீதி துறை, பொலிஸ் ஆணைக் குழு செயல்பட்டு ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும்.

தொழில் துறை, துரித அபிவிருத்தி என்பன குறுகிய காலகட்டங்களில் இடம்பெறுவதற்கு வழி வகைகளை பிரதம அமைச்சரவை ஊடாக மேற்கொள்ள, உறுதியாக சிறுபான்மைக் கட்சிகளும் செயற்படும்.

சிறுபான்மை சமூகத்தை வேறொரு கோணத்தில் பார்க்கத் தொடங்கிய போதும், பதவி பட்டத்துக்கு அடிமையற்று ஜனநாயகத்தை பாதுகாக்க சக சிறுபான்மைக் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி, ஹெல உறுமய, மலையக முன்னனி என்பன ஒன்றினைந்து ஜனநாயம் பாதுகாக்க போராடியது என்றார்.

Related Post