Breaking
Thu. Apr 25th, 2024
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே. இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய பயங்கரவாத குற்றங்கள் குறித்து மௌனமாக இருக்கும் இந்த அமைப்புகளை பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகள் என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா அமைப்புகள் தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள். தற்போதைய அரச நிர்வாகத்தில் உள்ள சில மேல் மட்டத்தினருக்கு முதுகெலும்பில்லை. இதன் விளைவாக முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் தனது தலையை உயர்த்தியுள்ளது எனவும் டிலாந்த வித்தானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா ஆகிய அமைப்புகள் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயர் மட்ட அமைப்புகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *