Breaking
Sat. Apr 20th, 2024
????????????????????????????????????

இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கித் தர காத்திருக்கும் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையிலான ஆட்சியொன்றினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைப்போம் எனவும் அழைப்புவிடுத்தார்.

பாராளுமன்றத்தேர்தலில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் பிரதமரும்,ஜக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியானது ஹிட்லரின் கொடுங்கோள் ஆட்சிக்கு ஒப்பானதாகும்.இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பட்ட துன்பங்கள்,பொருளாதார ரீதியில் இழந்த இழப்புக்கள்,அத்தோடு மட்டுமல்லாமல் மதத் தளங்கள் துவம்சம் செய்யப்பட்டதை ஒருபோதும் மறக்க முடியாது,

இவ்வாறானதொரு துரதிஷ்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவருமாறு மக்கள் எம்மிடம் வேண்டினார்கள்.அதனால் நாங்களும் அந்த மாற்றத்தை செய்து மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக கொண்டுவந்தோம்.

அதன் பிற்பாடு இந்த நாட்டில் நல்லாட்சியினை மக்கள் அனுபவிக்கின்றனர்.இந்த தேர்தல் என்பது மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக வாக்களிப்பது அல்ல,அவரது தேர்தல் முடிந்துவிட்டது இந்த தேர்தலானது சிறுபான்மை சமூகத்தின் உரிமை,பாதுகாப்பு உள்ளிட்ட இன்னும் எத்தனைளோ விடயங்களை சாதிக்க வேண்டியதற்கானத,அதனை நாம் அடைந்து கொள்ள பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அமர்த்த வேண்டும்.

திருகோணமலை மாவட்ட மக்களது நியாயத்தையும்,அவர்களது தர்மத்தையும் பாதுகாத்து அவர்களது வாழ்வில் சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்த வெண்டுமென்றால் முதுகெலும்பற்ற அரசியல் தலைமைகளால் அதனை பெற்றுக் கொடுக்க முடியாது என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,போரடக் கூடிய துணிவும்,நேர்மையும்,இறையச்சமும் கொண்ட அரசியல் தலைமைகள் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும்,அதற்காக நீங்கள் தகுதியான வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுமாறும் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள்விடுத்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *