Breaking
Thu. Apr 25th, 2024

இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமாக காணப்படுகின்ற கப்பற் துறை , முத்துநகர் காணிகள் உரியவர்களுக்காக துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் வெற்றுக் காணிகளில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் ஊடாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில் இன்று (19) வெள்ளிக் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

கப்பற் துறை பகுதிகளில் உள்ள சுமார் 750 ஹெக்டேயர் நிலப்பரப்பு பொது மக்களின் காணிகளை விடுவிப்பு செய்வது தொடர்பில் அப்போதைய துறை முகங்கள் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க அர்ஜூன ரணதுங்க போன்றோர்கள் நடவடிக்கைகளை எடுத்தார்கள்.
ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை

எனது தலைமையில் இதற்கான சகல நடவடிக்கைகளும் அமைச்சர் சாகல உட்பட அமைச்சின் செயலாளர் நிருவாக குழுவினரடங்கிய ஏழு பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் தனியாருக்கு சொந்தமாக்கப்படுவதுடன் 3700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறை முகங்கள் என்பது சர்வதேச நாடுகான் வர்த்தக தொடர்புகளையும் உருவாக்குகிறது திருகோணமலை காங்கேசன் துறை முகங்கள் அபிவிருத்தியடையவுள்ளது 1250 மில்லியன் ரூபா செலவில் இந்திய நாட்டு நிதி உதவியுடன் காங்கேசன் துறை முகமும் , 240 மில்லியன் செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் மூன்று வருட துரித அபிவிருத்தி ஊடாக திருகோணமலை துறை முகமும் அபிவிருத்தி செய்யப்படும்
இதே போன்று திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளும் பெற்றோலியம் ஐ.ஓ.சீ போன்ற உதவியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு எண்ணெய் சுத்திகரிப்பு இடமாக மாற்றப்பட்டு இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்  என்றார்.

Related Post