Breaking
Fri. Apr 26th, 2024

நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமை பெற்றதல்ல. எங்கள் குழந்தைகளிடம் இருந்து கடன் பெற்றதேயாகும்’;. மேற்கூறிய வார்த்தைகள் அமெரிக்க செவ்விந்தியர்களால் 1700 களில் கூறப்பட்ட உபதேசங்களாகும். இக்கூற்று நிலத்தின் பெறுமதியை வெளிக்காட்டுவதோடு , நிலமானது எதிர்கால சந்ததிகளின் உடமைகள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
மனிதன் நீரிலோ, ஆகாயத்திலோ வாழ முடியாது. வாழ்வதாயின் அவன் நிலத்திலேயே வாழ்ந்து தீர வேண்டும்.எனவே நிலத்தை பறி கொடுப்போமாயின் அது நம் வாழ்வுரிமையை பறிகொடுப்பதற்கு சமமாகும் .

சர்வதேச அளவில் கூட நிலத்தி;ட்டுக்கள் மிக முக்கிய கேந்திர நிலையங்களாக அமைந்து பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை கோரும் அளவுக்கு நிலத்தின் முக்கியத்துவம் காணப்படுகின்றது. உதாரணமாக தென் சீனக் கடலில் உள்ள வெற்று நிலமாக இருக்கும் ஸ்பிரட்லி (ளுpசயவடல) மற்றும் ‘பரசல்’ (Pயசநஉநடட ) தீவுகளுக்கு ஜப்பான், பிலிப்பைன்;, சீனா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள் போட்டி போட்டு உரிமை கொண்டாடுகின்றன. இதில் வல்லரசுகளான அமெரிக்கா, கூட தலையிட வேண்டிய வலுக்கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். எனவே நீரின் மத்தியில் கூட நிலத்தின் தேவையும் நில அவசியமும் உணரப்படுகின்றது என்பது நாம் ஏற்கனவே கூறிய நிலப்பயன்பாட்டின் முக்கி;யத்துவத்தை குறித்து நிற்கின்றது.
இதே போன்று வட அமெரிக்காவில் கனடாவுக்கு வடமேற்காகவும் ரஷ்யாவின் கிழக்கு கோடியில் அமைந்திருக்கும் அலாஸ்கா மாநிலத்தையும் குறிப்பிடலாம். ஐக்கிய அமெரிக்காவின் 49 வது மாநிலமாக விளங்கும் கனடாவுக்கு வட மேற்கேயுள்ள அலாஸ்கா ஆரம்பத்தில் ரஷ்யாவுக்குச் சொந்தமான நிலமாக இருந்த போது அந்த அலாஸ்கா நிலப்பரப்பின் முக்கியத்துவத்தையும் பொருளாதார வளங்களையும், புவியியல் ரீதியான கேந்திர முக்கியத்துவத்தையும் கருதி 1867 ல் மார்ச் மாதம் ஐக்கிய அமெரிக்கா
2
ரஷ்யாவிடமிருந்து இந்த அலாஸ்கா மாநிலத்தை பணம் கொடுத்து வாங்கியது என்பது அக்காலத்திலேயே நிலத்தின் பெறுமதி மிக உயர்வாக மதிக்கப்பட்டது என்பதை அறியலாம்.
வடக்கே தமது வாழிடங்களில் இருந்து 1990 ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது 20,000 ஏக்கருக்கும் அதிகமான தமது சொந்த காணிகளை அவர்கள் இழக்க வேண்டியேற்பட்டது. உயிரோடும், உரிமைகளோடும் பிரிக்க முடியாத தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேறி 30 வருட துயர்மிக்க அகதி வாழ்வுக்குப்பின் மீள் குடியேறும் முஸ்லிம் மக்களை ‘நில ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறுவது அடாத , அப்பட்டமான வெறிச்சொல் மாத்திரம் அல்ல, அது ஒரு பழிச்சொல்லுமாகும் .

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை நகரப்பகுதி முழுவதும் இன்று கடற்படை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது . இந்த நிலங்கள் முழுவதும் மக்களுடைய தனியார் காணிகளாகும் . இக்காணிகளை மீட்பதில் வன பரிபாலன திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் இன ரீதியான கெடுபிடியும் , நெருக்கடிகளும் பெரும் தடையாக உள்ளன. முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த முசலி, கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் காணி நிலங்களை 2010ல் இரவோடிரவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் வன இலாகாவுக்கு சொந்தமான காணிகள் என பிரகடனப்படுத்தியமை இன பாகுபாட்டின்; வெளிப்பாடேயன்றி வேறில்லை. இது தனிமனித அடிப்படை உரிமையை எடுத்தெறிந்த செயலாகும். இதற்கு தாமதியாது பரிகாரம் காண்பது அரசின் தலையாய கடமையாகும்.
அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் நிலம் , உயிர் வாழ்வதற்காகவும், வாழ்வாதார நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்து உயிர் வாழவும் , இருப்பிடம் அமைக்கவும் ,தொழில் செய்யவும் வேண்டப்படும் அடிப்படைத் தேவையாகும். புலி ஆக்கிரமிப்புக்காரர்களால் முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்டு , கையாடப்பட்ட நிலங்களை மீட்டிக்கொள்வது அம்மக்களின் அடிப்படை மனித உரிமையாகும் .இதனை மீட்டிக்கொடுப்பது அரசின் தலையாயக் கடமையாகும். அதற்காக முயற்சிப்பது அனைத்து முஸ்லிம் தலைமைகளினதும் தப்பிக்க முடியாத, இன்றியமையாத கடமையாகும் .

‘வடக்கில் தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் தங்களது தேவைக்காக ஆக்கிரமித்துள்ளனர்’ எனக்கூறி அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் துடிப்புடனும், தீரத்துடனும் முயற்சித்து அதில் விடியலை கண்டு கொண்டு இருக்கும் பொழுது , நமது மத்தியில் அரசியல் தலைவர் ஒருவர் முஸ்லீPம்கள் பறிகொடுத்த நில மீட்புக்காகவும் , மீள் குடியேற்றத்திற்காகவும் அயராது உழைத்துக்கொண்டு இருக்கும் பொழுது , அதற்கு உதவ ஏனைய முஸ்லீம் தலைமைகளும் முன்வருவது அவர்களது கடமையாகும்.
வடபுல முஸ்லீம்களின் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படாத வரை அவர்களுக்கு வாழ்வாதாரம்; இல்லை . வாழும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளாகிய இந்த இடம் பெயர்ந்த முஸ்லீம்களின் நிலத்தை மீட்டிக் கொடுத்து அதில் அவர்களை மீள்குடியேற்றம் செய்வது அரசின் தவிர்க்க முடியாத , தப்பி விலகிச் செல்ல முடியாத கடமையாகும்.

நில மீட்பு , மீள் குடியேற்றம் ஆகியவற்றில் தனி ஆளாக, தனி கையோடு தன்னந்தனியாக போராடும் அமைச்சர் றிசாதிற்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருந்தால் அதுவே கோடி பெறும்.
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக 30 வருடத்திற்குள் புலிகளால் சூறையாடப்பட்டு இழந்த முஸ்லீம்களின் காணிகளின் பரப்பு 60,000 ஏக்கருக்கும் மேற்பட்டதாகும்.
30 வருட யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட இடங்கள் இன்று அரச பாதுகாப்பு படைகளின் கீழும், புலிகளின் ஆதரவாளர்களின் கீழும் இருக்கின்றன. வாழ்வாதார வளங்களை அள்ளித் தரக்கூடிய இந்த நிலங்களை மீட்டெடுக்க கிழக்கில் அரச அதிகாரம் பெற்ற கட்சிகள் வாய் பொத்தி மௌனம் காப்பது விசித்திரமான விடயமாகும். மீட்கக் கூடிய காணிகள் , நிலங்கள் இப்படி இருக்கும் பொழுது எல்லை ஓரங்களில் பெரும்பான்மை சமூகத்தினரின் அத்துமீறல்களும், சுரண்டல்களும் தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு சமுகத்தின் நில உரிமைக்கு எதிராக தொடுக்கப்படும்; சவாலாகும்.
இத்தகைய ஆக்கிரமிப்பு வெளிப்படையாக இன்றும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த

பொத்துவில் செயலகப்பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ‘லகுகல’ என்ற செயலகப் பிரிவை ஏற்படுத்தி ஏறக்குறைய 8900 மக்களைக் கொண்ட அந்த ‘லகுகல’ செயலகப் பிரிவுக்கு நிலத்தில் 2ஃ3 பகுதி பங்கும் , அதே நேரத்தில் ஏறக்குறைய 35,000 மக்களை கொண்ட பொத்துவில் செயலகப்பிரிவிற்க்கு 1ஃ3 பங்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘லகுகல’ சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட செயலகமாகும். ‘பொத்துவில’; முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட செயலகப் பிரிவாகும்.
மறு வார்த்தையில் கூறுவதாயின் பொத்துவில் செயலகப் பிரிவின் மொத்த ஜனத்தொகையில் 1ஃ4 பங்கு சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட லகுகலைக்கு 2ஃ3 பங்கு நிலமும் , 3ஃ4 பங்கு முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட பொத்துவில் பிரதேச சபைக்கு 1ஃ3 பங்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிப்படையாக இனப்பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்பது வெள்ளிடை மலையாகும்; .
எமது கவனத்தை திருகோணமலை மாவட்டத்தின் பக்கம் செலுத்துவோமாயின் , ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டமானது, மூதூர் தேர்தல் தொகுதி, திருகோணமலை தேர்தல்; தொகுதி என இரு தேர்தல் தொகுதிகளையே உள்ளடக்கி இருந்தது. ஆனால் 1976 ல் நடந்த தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது மூதூர் தேர்தல் தொகுதியின் பெரும் பங்கு நிலத்தையும் , திருகோணமலைத் தேர்தல் தொகுதியின் பெரும் பங்கு நிலத்தையும் உள்ளடக்கியதாக ‘சேருவில’ என்ற சிங்களை மக்களை அதிகமாகக் கொண்ட தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்பொழுது 74,000 வாக்காளர்களைக் கொண்ட ‘ சேருவில’ தொகுதியில் சிங்கள வாக்காளர்களின் மொத்த தொகை 45,000 ஆகும். 1,83000 மொத்த வாக்காளர்களைக் கொண்ட திருகோணமலை, மூதூர் ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளிலும் இருந்த சிங்கள வாக்காளர்களின் தொகை ஏறக்குறைய 20,000 ஆகும் .
சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 74,000 வாக்காளர்களை உள்ளடக்கிய ‘சேருவில’ தொகுதிக்கு திருகோணமலை மாவட்டத்தின் 2ஃ3 நிலப்பரப்பும் ,

1,63000 மொத்த வாக்காளர்களைக் கொண்ட திருகோணமலை, மூதூர் தேர்தல் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 1ஃ3 பங்கும் ஆகும். இது திட்டமிடப்பட்ட இனபாகுபாட்டின் வெளிப்பாடேயாகும்.
இதே போன்று ஆரம்பத்தில் ஒரே தொகுதியாக இருந்த புத்தளம் தேர்தல் தொகுதி 1976 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயிப்பின் போது இரண்டாகப் பிரிக்கப்பட்டு ‘ஆணமடுவ’ என்ற சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இதில் கூடுதலான நிலப்பரப்பு ‘ஆணமடுவ’ பகுதிக்கு ஒதுக்கப்பட்ட அதே வேளையில் , புத்தளம் தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறைவாக இருந்தது மட்டுமன்றி வாவிகளையும் , கடல் ஏரிகளையும் கொண்டதாகவும் அமைந்திருந்தது .மேலும் இங்கு விகிதாசார முரண்பாட்டையும் , இனப்பாகுபாட்டையும் காணலாம்.
இலங்கையின் 160 தேர்தல் தொகுதிகளில் மிகவும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஒரே தேர்தல் தொகுதி கல்முனையாகும். இந்த தேர்தல் தொகுதி ‘திகாமடுல்ல’ மாவட்டத்தில் அமைந்துள்ளது. கல்முனை தேர்தல் தொகுதியானது இரண்டு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்டது. கல்;முனையில் வாக்காளர்கள் தொகை 75000 ஆக இருக்கும் பொழுது சிங்கள மக்களை அதி பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,62000 ஆகும்.
கல்முனையைப் போல் இரு மடங்கு வாக்காளர்களைக் கொண்ட அம்பாறைத் தொகுதி பரப்பளவில் கல்முனையைப் போல் 20 மடங்கு பெரிய பரப்பை கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
இந்த அடிப்படையில் நோக்கும் போது தமிழ் தேசிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அண்மையில், மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ‘ மட்டக்களப்பில் நடைபெறுகின்ற அத்து மீறிய சிங்கள குடியேற்றம் மற்றும் விகாரைகள் அமைப்பதற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் துணை போவார்களாக இருந்தால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவாம் ‘ எனக்

குறிப்பிட்ட இக்கூற்று விரும்பப் படத்தக்கதாகவே அமைகின்றது. எனவே நில ஒதுக்கீட்டில் பாரதூரமான மாபெரும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகும். அம்பாறை தொகுதியில் சிறுபான்மையைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2000 க்கும் குறைவாகும். மேற்கூறிய உண்மைகளில் இருந்து நிலப்பங்கீட்டிலும் , வாக்காளர் பங்கீட்டிலும் மாபெரும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளதோடு இனங்களுக்கிடையிலான மன ஒற்றுமை, சமத்துவ மனப்பான்மை, இன நல்லெண்ணம் மொத்தத்தில் சமாதான சக வாழ்வு எப்படி ஏற்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது????

வடக்கிலே தமிழ் மக்களின் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தமிழ் அரசியல் வாதிகளின் பகீரத முயற்சியால் வலிகாமம் போன்ற இடங்களிலும், அதே போன்று கிழக்கே திருகோணமலைப் பிரதேசத்தில் சாம்பூர் பகுதியிலும் நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதே போன்ற முயற்சிகளை முஸ்லீம் அரசியல் வாதிகளும் தீவிரமாக எடுக்க வேண்டும் என்று நிலத்தைப் பரிகொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
இப்படியான பாகுபாடுகளும், வேற்றுமைகளும் நீக்கப்படாத வரை மனக்குரோதங்கள் நீங்கி இன ஒற்றுமை ஏற்படுவது கடினமாகவே உள்ளது.

எஸ் . சுபைர்தீன்
செயலாளர் நாயகம்- அ.இ.ம.கா
;

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *