Breaking
Fri. Apr 19th, 2024

டந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலிப்பிரதேச சபைத் தலைவர் எஹியான் மற்றும் பிரதேச சபை ஆளும், எதிர் கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

 இதன் போது எழுத்து மூல மகஜர் ஒன்றும் மாவட்ட செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சமர்பித்தனர். அதில் பின்வரும் விடயங்கள் முக்கியமாக குறிப்பிடப் பட்டிருந்தது.   ‘1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் பலவகையில் பாதிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர்’   இந்த வகையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த உதவிய அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் முப்படையினருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பிறகு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மிகவும் மந்த கெதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு சர்வதேச நிறுவனங்கள், உள்ளுர் நிறுவனங்கள், அரசாங்கம் என்பன மிகவும் குறைந்தலவிலான உதவிகளைக் கூட செய்வதற்கு பல சாட்டுப் போக்குகளை காரணம் காட்டுவதை அவதானிக்க முடிகிறது.   முசலிப் பிரதேசத்தில் காணி அற்றவர்களுக்கு முறைப்படி பிரதேச செயலாளரினால் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

 இக்காணிகள் படையினரால் சுவீகரிக்கப் பட்ட சிலாவத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக் கட்டி போன்ற கிராமங்களுக்கான மாற்றுக் காணிகள் அல்லது 1990ற்குப் பின்னர் பெருக்கமடைந்த குடும்பங்களுக்காகவே இக்காணிகள் உரிய முறைப்படி கையளிக்கப்பட்டிருக்கின்றன.   மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப் பட்டு 3வருடங்கள் ஆகியும் இன்னமும் முஸ்லிம் குடும்பங்கள் மரங்களுக்கு கீழும், தற்காலிகக் கொட்டில்களுக்குள்ளும் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 இந்த நிலையில் அவர்களுக்கு உதவியும் செய்யாமல் முறையற்ற விதத்தில் பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொள்வதாக மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். அந்த முறைப்பாடுகளாவன:

 1. மக்கள் காணிகளைத்துப்பரவு செய்து வீடுகளைக் கட்டச் செல்லும் போது அது பாதுகாப்புப் பிரதேசம் என்று தடைசெய்வது, அந்த மக்களுக்க உரிய காணி அனுமதிப் பத்திரம் இருந்தும் கூட.

 2. மக்களுக்கு வழங்கப் பட்ட காணிகளின் அலவைக் குறைத்து எல்லை போடு மாறு மக்களை வற்புறுத்துதல்.

 3. புதிய கிராமப் பெயர் அடங்கிய பெயர் பலகைகளை மக்கள் வாழ்கின்ற கிராமத்தின் எல்லைக்குள் பலவந்தமாக படையினர் நட்டுகின்றனர்.

 4. மீள்குடியேறுகின்ற மக்கள் தங்களது நிலங்களைத் துப்பரவு செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது, இயந்திர சாரதிகளைத் துப்பரவு செய்ய வேண்டாம் என்று அச்சுறுத்துகின்றனர்.

 முசலிப் பிரதேசத்தின் மக்கள் கடந்த கால ஜனாதிபதி, பாராளுமன்ற, பிரதேச சபை, மாகாண சபைத் தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்திருந்தனர்.   அவர்களின் பிரதிநிதிகள் நாங்கள் என்ற வகையில் எங்களிடம் படையினரின் செயற்பாட்டை எதிர்த்து முறையிட்டுள்ளனர். நாங்கள் வாக்களித்த ஆளும் கட்சியின் கட்டுப் பாட்டினுள் இருக்கின்ற முசலிப் பிரதேசத்தை இப்போது ஏன் படையினர் ஆளுகின்றனர்.

 மேற்படி விடயங்கள் உள்ளடங்கவாகவும் முசலி மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்படுகின்ற தடங்கள்களை நீக்கி பாவப் பட்ட, பாதிப்புக்குள்ளான இம் மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறும், சமாதான சிவில் நிருவாகத்தை முசலியில் ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையெப்பமிட்ட மகஜரை அரசியல் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அனுப்பிவைத்துள்ளார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *