Breaking
Thu. Apr 25th, 2024

கல்வியறிவோடு உடற்கல்வியும் மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும். ஏனெனில் விளையாட்டுகள் சிறந்த மானிடப்பண்புகளை வளர்க்கின்றது. தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பனவற்றை கூறமுடியும். இந்த தருணத்தில் எமது பிரதேச விளையாட்டு கழகங்களை மேம்படுத்தவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு உறுதுணையாகவும் செயற்பட்டார். எமது மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் எம். பி.

கடந்த 2018ம் ஆண்டில் கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுத்தீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் கௌரவ. நவவி அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட DCB நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph. D) அவர்களினால் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 08.03.2019ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனை மன்றத்தில் வெகுவிமரிசியாக இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M ஹனீபா , உதவி பிரதேச செயலாளர் ஆசிக் , திட்டமிடல் பணிப்பாளர் A.L அப்துல் மஜீட், கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி U.L.M. சமீம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நான்கு விளையாட்டு கழகங்களுக்கு DCB நிதியிலிருந்து இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் “கௌண்டி” விளையாட்டு கழகம் சார்பாக நூர் முஹம்மட் அவர்களும் “ஈஸ்டன்” றோயல் விளையாட்டு கழகம் சார்பாக அசாம் அவர்களும் “யுனிட்டி” விளையாட்டு கழகம் சார்பாக முசாபிர் அவர்களும் ‘ரேஞ்சர்ஸ்” விளையாட்டு கழகம் சார்பாக அசாம் அவர்களும் விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்டார்கள்.

சமா அமைப்பின் அனுசரணையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வில் “ஸ்பார்ட்டஸ்” கழகத்கிற்கு. சமா அமைப்பின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph. D) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அதேபோன்று 2018ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் தேர்வான 100m ஓட்ட பந்தய வீரர். M.A.M இம்சான் மற்றும் நீளம் பாய்தல் நிகழ்ச்சிக்கு தெரிவான வீரர் M.H.M வபீம் லுத்பி அவர்களும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்கள்.

Related Post