Breaking
Tue. Apr 23rd, 2024

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை விடவும் மோச­மான ஒரு நிலை­மையை இந்த நாட்டில் கொண்டுவர பொது­பல சேனா அமைப்­பினர் முயற்­சிக்­கின்­றனர் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் குற்றம் சாட்­டி­யுள்ளார். கடந்த முப்­பது வருட கால யுத்­தத்தின் பின்னர் நிம்­ம­தி­யான சூழ்­நிலை ஏற்­ப­டு­மென்றும், அச்­ச­மின்றி தொழில் செய்­யலாம், பிள்­ளை­க­ளுக்கு கல்வி புகட்­டலாம் என்றும் மக்கள் நம்­பி­யி­ருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோச­மான நிலையை பொது­பல சேனா அமைப்பு உரு­வாக்­கி­யுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இவ்­வி­டயம் குறித்து அவர் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில், சிறு­பான்­மை­யி­னரின் அடை­யா­ளங்­க­ளையும் மதங்­க­ளையும் அழிப்­ப­துடன் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இந்த நாடு சொந்­த­மில்லை. இது ஒரு பெளத்த நாடு என்று தெரி­வித்து வந்த பொது­பல சேனா அமைப்­பினர் இப்­பொ­ழுது அவர்­க­ளது இனத்­து­ட­னேயே மோது­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. அண்­மையில் இவர்கள் பெளத்த பிக்கு ஒரு­வரை துரத்திச் சென்று ஐ பாட்டால் தாக்­குதல் நடத்­திய சம்­ப­வ­மொன்றும் இடம் பெற்­றுள்­ளது.

தாங்கள் நினைத்தால் ஆட்­சி­யையே மாற்­றுவோம் என்று அண்­மையில் இந்த அமைப்பு சூளு­ரைத்­துள்­ளது. பெளத்த மக்­களின் ஆத­ர­வின்றி ஜனா­தி­ப­தியால் மீண்டும் தேர்­தலில் வெல்ல முடி­யுமா? என்றும் இவர்கள் ஜனா­தி­ப­திக்கே சவால் விடும் நிலைக்குச் சென்­றுள்­ளனர். அதே போல் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு உத­வி­யுள்­ள­தாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவும் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். எதிர்­கா­லத்தில் இவர்கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவும் செயல்­ப­டு­வார்கள்.

தாங்கள் எதனைச் செய்­தாலும் யாரும் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்ற வகையில் தான் இந்த அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. பெளத்­தர்கள் அனை­வரும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பொலி­ஸா­ராக மாற வேண்டும் என்று இந்த அமைப்பு தெரி­வித்­தது.

சிறு­பான்மை இனத்தவரை அடக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதின் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *