Breaking
Fri. Apr 19th, 2024

“கிராம சக்தி” எனும் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(21) மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிலங்குளம், பறப்பான் கண்டலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் மக்களின் அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

தவிசாளர் முஜாஹிர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அரசியல் கலாச்சாரம் சீரழிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்திலும் எமது அமைச்சர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பல இடர்களுக்கும் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக மன்னார் பிரதேச மக்களுக்கு செய்து கொடுத்துள்ளார்.

அவ்வாறே வரும் காலங்களில் எமது அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வுகளையும் நடைமுறைப் படுத்துவோம் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்த “கிராம சக்தி” சம்பந்தமான கலந்தாலோசனை நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் ஜீவானந்தன், பிரதேச செயலாளர், முன்னாள் பிரதேச சபை வேட்பாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர் மற்றும் கிராம மக்கள் சகிதம் கலந்து கொண்டனர்.

Related Post