Breaking
Fri. Apr 26th, 2024
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம  மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (17) கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
“கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தில், 857 குடும்பங்களை சேர்ந்த 3187 பேர்  பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அன்றாடம் தொழில் செய்வதன் மூலம் தங்களுடைய ஜீவனோபாயத்தை தேடிவந்த நிலையில் தொழிலை இழந்து, நிர்க்கதியாகி, பட்டினியால் வாடும் இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர தேவைகளான பால்மா, மருத்துவ செலவுகள் போன்ற இன்னோரன்ன செலவுகளுக்கு எந்தவித வருமானமும் இன்றி அவதியுறுகின்றார்கள்.
தொடர்ந்தும் கஷ்டங்களை அனுபவிக்கும் இவர்களுக்கு, கட்டுப்பாடுகளை இழப்பதற்கு முன்னரே அரசினால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளான 5000/- ரூபாவினையும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த குடும்பங்களுக்கான 10000/- ரூபாவையும் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கமும், அதிகாரிகளும் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post