Breaking
Tue. Apr 16th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் இன்று இடம் பெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது மீள்குடியேற்ற அமைச்சர்,பிரதி அமைச்சர்,செயலாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தலைமையில் இன்று  இடம் பெற்றது.இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான் மற்றும்

அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்..
இக் கூட்டத்தில் மேலும் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் –
வடக்கில் யுத்தம் ஓய்ந்து மக்கள் தமது பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.முஸ்லிம்கள் மட்டும் நீண்ட கால இடம் பெயர்வுக்குள்ளாக்கப்பட்டதால் அவரகளது துரித மீள்குடியேற்றம் சாத்திமற்றதாக நோக்கப்பட்டுவந்தது.இதனை கவனத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் மீள்குடியேறவரும் மக்களுக்கு முள்ளியாவலை பகுதியில் உள்ள வனபரிபாலன அதிககாரிகள்.அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் அடையாளப்படுத்தப்பட்ட காணியினை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இதற்கான சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களும் உரிய முறையில் பெறப்பட்டு வனபரிபாலன திணைக்களமும்,அந்த காணியினை விடுவிப்பு செய்துள்ள வேலையில் அது இன்னும் மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது என்று 4றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கஜனை இடை மறித்த செயலாளர் அதனை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூற,மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஏதோ பிரச்சினையொன்று உள்ளது என்று கூறினார்.மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இந்த பிரச்சினை என்னவென்பதை தெரிவியுங்கள் என்று இங்கு சுட்டிக்காட்டிய போது,இது குறித்து அரசாங்க அதிபரிடம் அறிக்கையொன்றினை கோருவதற்கு செயலாளர் நடவடிக்கையெடுப்பதாக கூறினார்.
அதே வேளை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் மீ்ள்குடியேறியுள்ள மக்களுக்கான அத்தியவசிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான தகடுகள் கூட வழங்கப்படவில்லை.அதனை பெற்றுக் கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சர் செயலாளர் ஆகியோர் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதே முசலி பிரதேசம் என்பது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகும்,அங்கு பெரும்பான்மை இனத்தவர்களை குடியமர்த்த நடவடிக்கையெடுக்கப்படுவதாக மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றது என்று கூறிய பொது,இடை மறித்த அமைச்சர் குணரத்ன வீரகோண் அது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழந்த பிரதேசம் அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்ற தொனியில் இது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும்  மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *