Breaking
Thu. Apr 25th, 2024

 

-சுஐப் எம். காசிம் –

நமது நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கிறார்களோ அவ்வாறே நீண்ட காலம் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகும். முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுடனும் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடனும் அன்பு பேணி ஐக்கியம் வளர்த்து வாழ்ந்து வருபவர்கள். சமய ரீதியான தனித்துவங்களும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்ட போதும் மொழியால் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தாய் மொழியும் போதனா மொழியும் தமிழ் என்பதால் அங்கு வாழும் தமிழ்ச்சகோதரர்களுடன் வாழ்வியல் ரீதியாக ஒன்றிணைந்து ஒன்றுபட்டு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயம், வர்த்தகம், மீன்பிடி தோட்டச் செய்கை போன்ற தொழில்களிலே அப்துல் காதரும் ஐயாத்துரையும் ஒற்றுமையாக தொழில் புரிந்து இன பேதமற்று வாழ்ந்தமை வரலாறு. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளிலே பாத்திமாவும் பரமேஸ்வரியும் அருகமர்ந்து அன்பைப் பரிமாறி நல்ல நண்பர்களாய் சோதரர்களாய் வாழ்ந்து வந்த இனிய இன உறவு வடக்கு கிழக்கில் நிலவியது. சிங்கள தமிழ் மக்களின் சமயக் கொள்கைகள்ää வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றுக்கு உரிய கண்ணியம் கொடுத்து மதித்து வாழும் இயல்பு முஸ்லிம்களின் பண்பாகும்.

 
ஆயினும் 1983 க்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் புலிகளின் கையை ஓங்க வைத்தது. புலிகள் முஸ்லிம்களை வேற்றுக் கண்ணோடு; நோக்கினர். பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் நன்னிலையில் இருப்பதைச் சகிக்காத புலிகள் முஸ்லிம்களை பல வழிகளிலும் நசுக்கினர். முஸ்லிம் கடைகளில் கப்பம் பெற்றனர். வாகன உரிமையாளர், விவசாயிகளிடம் பணம் பெற்றனர். விறகு வெட்டிப் பிழைக்கும் தொழிலாளரிடம் கூட வரி அறவிட்டனர். 1990 வரையான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் அனந்தம்.

 
இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் இறைமையை மதித்துப் பேணுபவர்கள். சிங்கள மன்னர்களின் காலம் தொடக்கம் அந்நியரின் படையெடுப்பை எதிர்த்து சிங்கள மன்னர்களுக்கு உறுதுணையாக நின்று போரி;ட்டவர்கள். வேண்டிய போதெல்லாம் தம் உயிரைப் பணயம் வைத்து நாட்டின் நலனுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள். சுதந்திர இலங்கையிலே நாட்டின் பிரிவினையை முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஒரே நாடெனும் கொள்கையுடன் செயல்பட்டனர். தேசிய அரசுக்கு விசுவாசமாக வாழ்ந்து வருகின்றனர்.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம்.

புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் பிரிவினைக்கும் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இணக்கம் இல்லை என்பதை அறிந்த புலிகள் முஸ்லிம்களை வருத்தினர். மேலும் வடக்கிலே தனித் தமிழ் ஈழம் அமைக்கும் செயற்பாட்டுக்கு வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்தனர். 1990 ஐப்பசியில் புலிகளின் பாசிசக் கொள்கையின் கோர முகம் தலைகாட்டியது.

 
காலாகாலமாகச் சொந்த மண்ணில் சுகமாக வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் ஒரு நாள் கெடுவில் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர். சொத்து சுகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. வழிச்செலவுக்கான பணம் தவிர ஏனைய அனைத்தையும் தாரைவார்த்துவிட்டு வெளியேறிய முஸ்லிம்கள் அகதிகளாய் அபலைகளாய் அல்லல் பட்டு புத்தளம், குருநாகல் போன்ற இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அகதிகள் எங்கு சென்றார்களோ அங்கெல்லாம் உள்ள முஸ்லிம்கள் பரோபகார சிந்தையுடன் உதவி நல்கினர்.

அன்றைய ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசு இவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு வேண்டிய உதவி எதையும் செய்யவில்லை. ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் அமைச்சர் மர்ஹம் அஷ்ரப் அவர்கள் அகதிகளுக்கு தற்காலிக வாழ்வியல் வசதிகளைச் செய்ததுடன் உலர் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள்.

விடுதலைப் புலிகள் விரட்டியதால் வடபுல முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் எண்ணிலடங்கா. 50000 குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. கல்வீடுகளில் உள்ள ஓடுகள், கதவு நிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள் தளபாடங்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு உரிமையான பல ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் தென்னந்தோட்டங்கள் காடாகும் நிலை ஏற்பட்டது. அவற்றில் பெற வேண்டிய 23 ஆண்டுகளுக்கான பயன்கள் இழக்கப்பட்படன. தொழில் செய்த தோணிகளும் வலைகளும் இழக்கப்பட்டன. 79 பள்ளிகள் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டன. 69 முஸ்லிம் பாடசாலைகள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன.

 

பல்லாயிரம் பில்லியன் பெறுமதியான சொத்துக்களை முஸ்லிம்கள் இழந்தனர்.
நீண்ட காலம் நம்முடன் வாழ்ந்த சகோரத முஸ்லிம்கள் இத்தனை அழிவுகளுக்கும் அல்லல் துன்பங்களுக்கும் ஆட்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வடக்கில் சொந்த வயல்கள் தோட்டங்கள் உள்ளன வீடமைக்கும் காணிகள் இருந்தன எனவே இந்த அபலை மக்கள் வடக்கில் மீண்டும் வாழும் உரிமை உடையவர்கள் என்ற மனோபாவமும் மனிதாபிமான எண்ணமும் வடபுல அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் சமுகத் தலைவர்களுக்கும் அதிகாரிகள் சிலருக்கும் இல்லாமல் போனது விந்தையே.

 

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பரணமாக நிறைவேறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் வடபுல சுயநலமிகளின் குறுக்கீடாகும். 23 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்து வளர்ந்த இளைஞர் சமூகத்துக்கு முஸ்லிம்கள் வடக்கில் வாழ்ந்த வரலாறு இங்கே வாழும் உரிமையும் காணி, பமியும் அவர்களுக்கு உண்டு என்பது தெரியாதிருக்கலாம். பழைய வரலாற்றை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறவேண்டிய தார்மீகக் கடமை பெரியவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உரிமையான வயல் காணிகளில் மற்றவர் அத்துமீறி பயிர் செய்கின்றனர். காணியை விடாமல் அடம் பிடிக்கின்றனர். வடபுல முஸ்லிம்கள் பயிர் செய்த காணிகள் 23 ஆண்டுகளில் காடாகிவிட்ட நிலையில் இந்தக் காணிகள் 1994, 1995 ஆம் ஆண்டுகளில் காணிக் கச்சேரி வைக்கப்பட்டு புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதால் முஸ்லிம்களின் காணிகள் பறிபோயுள்ளன. விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு ஐகநாதன் GA அவர்களால் வழங்கப்பட்ட சன்னார் மேட்டுநிலக் காணி இன்று வேற்றிடங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையாகி விட்டது. இந்த சுற்றாடலில் முஸ்லிம்கள் அரசிடம் காணி பெறுவதை சுயநலம் கொண்ட அதிகாரிகளும் மதவாதிகளும் தடை செய்வது வேதனையான விடயம்.
இடம் பெயரும் போது ¼ ஏக்கர் காணியில் இருந்த இரு குடும்பங்கள் தற்போது 810 குடும்பங்களாகி விட்ட காரணத்தால் புதிய குடும்பங்களுக்கு காணி தேவைப்படுகின்றன. இத்தகைய காணி போதாத பிரச்சினைதான் இன்று மீள் குடியேறும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகளாகும்.

அமைச்சர் றிஷாட் மேற்கொண்டு வரும் முயற்சிகள்.

மன்னாரில் பிறந்து அகதி முகாமில் வாழ்ந்து அல்லல் பட்ட அமைச்சர் றிசாட் மீள்குடியேற்ற விடயத்தில் இதய சுத்தியுடன் அதீத அக்கறை எடுத்து வருகிறார். எனவே முஸ்லிம் பரிதிநிதியான அமைச்சர் றிசாட் அவர்களே அரச காணிகளைப் பெற்று மீள்குடியேற்றைத்தை நிறைவு செய்ய முயற்சிக்கிறார்;. அவரது இந்த அரிய முயற்சிக்கு மற்றொரு அகதியான ஹனைஸ் பாரூக் எம்.பி உத்வேகம் வழங்கி வருகிறார். வன்னி எம்.பிக்கள் என்ற வகையில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இனத்துவேசக் கண்கொண்டு மற்றவர்களால் நோக்கப்படுகின்றது. அதனால் அமைச்சர் றிஷாட் மீது வீண்பழி சுமத்தும் கீழ்த்தரமான செயலில் இனவாதிகளும் சில அரசியல்வாதிகளும் ஈடுபடுகின்றனர்.

 
இந்நிலை வடபுல முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. யுத்த முடிவுக்கு சற்று முற்பட்ட காலத்தில் இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் பேரையும் மீள் குடியேற்றிய பெருமைக்குரியவர் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாட் அவர்களே. அரசின் நன்னோக்கத்தை அவர் செவ்வனே நிறைவேற்றினார். அது போலவே வடபுல முஸ்லிம்களையும் சொந்த மண்ணில் குடியேற்ற அமைச்சர் றிசாட் அரசின் அனுசரணையுடன் புதிய காணியைப் பெற்று காணியற்ற குடும்பங்களை குடியேற்ற முயற்சி செய்கிறார். அமைச்சரின் தார்மீகக் கடமையான இந்த நடவடிக்கை வடபுலத்தில் உள்ள இன ரீதியாகச் சிந்திக்கும் சுயநலம் கொன்டவர்களால் விமர்சிக்கப்படுகிறது. பல்வேறு வகையிலும் தடை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 
அதே வேளை தென்னிலங்கை இனவாத அமைப்புகள் மூலமும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வில்பத்து சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள முஸ்லிம் கிறாமங்களில் காடு வெட்டும் போது அது வில்பத்துவை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து “அரபுக் கொலனி” அமைக்க றிசாத்தும் முஸ்லிம் மக்களும் முயற்சிப்பதாக திரிபு படுத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனாவின் இத்தகைய கற்பனைக் கதைகள் அர்த்தமற்றவை ஆதாரமற்றவை என்பதை களநிலையை பார்வையிடும் போது அறிந்து கொள்ள முடியும்.

 
அமைச்சர் றிசாட் தன்னிச்சையாகவோ தான்தோன்றித்தனமாகவோ முஸ்லிம்களுக்குத் தேவையான அரச காணியைப் பெற முயற்சிக்கவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் முஸ்லிம் கிறாமங்களை தரிசித்து பிரச்சினையை அறிந்து அமைக்கப்பட்ட ஐனாதிபதி செயலணிக் குழுவின் விதந்துரைக்கு அமையவே தேவையான கிராமங்களின் அருகாமையில் அரச காணி பெற முயற்சிக்கப்பட்டது. ஓர் இலங்கைப் பிரசை இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை உடையவர் என்ற அடிப்படையில் வடபுலத்தில் வாழ்ந்து இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த தாயகத்தில் வாழும் உரிமை உடையவர்கள் என்பதை இன ரீதியாக மூச்சு விடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

 
ஐனாதிபதி செயலணிக்குழுவின் ஆலோசனைப்படி அமைச்சர் றிசாட் காணி பெற எடுத்த முயற்சிகள் செயற்பாடுகள்.

 
30 ஆண்டு காலம் இந்நாட்டைச் சீரழித்த உள்நாட்டுப் போர் 2009 ஏப்ரலில் முடிவுக்கு வந்தது. யுத்த காலத்திலே வடபுலத்தில் இருந்து கலைக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் தென்னிலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இடம் பெயர்ந்து அகதிகளாய் அல்லல்பட்டு வாழ்ந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இம்மக்கள் தம் சொந்த மண்ணில் வாழும் உரிமையுடன் மீளக்குடியமர 22 ஆயிரம் குடும்பங்கள் பதிவு செய்த போதும் இவர்களுள் 62மூ மானோர் மட்டுமே மீளக்குடியமர்ந்து உள்ளனர். விவசாய சமுகமான வடபுல முஸ்லிம் குடும்பங்கள் குடியேறிய ப10மியிலே தொடர்ந்து வாழ்வதில் விவசாய வசதி வீட்டு வசதி போன்றவற்றில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குடியேற்றத்திற்கு தடையாக உள்ளன.
மீள் குடியேறிய மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள்.

மன்னார் மாவட்டத்தில் மடு, மன்னார் நகரம், மாந்தை மேற்கு, முசலி,நானாட்டான் பிரதேசங்களில் 52 கிராமசேவகர் பிரிவுகளிலும் உள்ள 59 கிராமங்களில் வாழ்ந்த மக்களுள் 15321 குடும்பங்கள் மீள் குடியேற பதிவு செய்தனர். தற்போது 7828 குடும்பங்களே மீளக் குடியேறி உள்ளனர்.

 
வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரம் செட்டிகுளம் உட்பட 7 கிராமங்களில் பதிவு செய்த 1046 குடும்பங்கள் மீள் குடியேறி வாழ்கின்றனர். முல்லைத்தீவில் கடலோரக் கிராமங்கள் (Maritame Pattu) ஒட்டுசுட்டான் பகுதியில் 11 கிராமங்களுள் பதிவு செய்த 2744 குடும்பங்களுள் 2060 குடும்பங்கள் மீள்குடியேறி உள்ளது.

 

யாழ் மாவட்டத்தில் யாழ் நகரம் சாவகச்சேரியில் 8 கிராமங்களில் உள்ள 2047 பேர் பதிவு செய்து மீள்குடியேறி உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்த 736 குடும்பங்களும் சொந்த மண்ணில் வாழ்கின்றன.

 
மொத்தமாக 77 கிராம சேவையாளர் பிரிவி;ல் உள்ள 88 கிராமங்களைச் சேர்ந்த 22134 குடும்பங்கள் மீள் குடியேற பதிவு செய்தனராயினும் 13957 குடும்பங்களே தற்போது சொந்த மண்ணில் வாழ்கின்றனர். குடியேற வேண்டிய 8177 குடும்பங்கள் மீள் குடியேறாமைக்கு பல வகையான காரணங்கள் உள்ளன. குடியேறுவதற்குப் பொருத்தமான நிலமில்லாமை ஒரு காரணம். இடம் பெயரும் போது இருந்த 75000 குடும்பங்கள 23 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் பழைய கிராமங்கள் நீண்ட கால பராமரிப்பின்றி காடாகி விட்டன. பாதைகள் அழிந்து காடாகி கிடக்கின்றன.

 
குடிநீர் கிணறுகள் பாழடைந்து தூர்ந்து போயுள்ளன. குழாய் நீர் பெற்ற கிராமங்களில் குழாய்கள், நீர் தாங்கிகள் அழிந்து உடைந்ததால் குடிநீர் பெறுவதில் கஷ்டங்கள் உள்ளன. பாடசாலைகள் வைத்திய சாலைகள், பொதுச் சேவைக்கான மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் அழிந்து காடு மூடிக் கிடக்கின்றன. குடியேறும் மக்களுக்கு உடனடித்தேவையான சுகாதார வசதிகளும் இல்லை. இத்தகைய வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத்தேவை குறைபாடுகளே மீள் குடியேற்றம் சிறப்பாக நடைபெற தடையாக உள்ளன.

 
யுத்த நெருக்கடி காலத்திலே தற்காலிகமாக இடம் பெயர்ந்தவர்களின் நிலைமைக்கும் 23 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளால் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்களின் இடப்பெயர்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. யுத்த முஸ்தீபு காலத்திலும் யுத்தம் இடம்பெற்ற போதும் அரசியல் சமூக காரணிகளால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக உறவின்ர் வீடுகளிலும் வவுனியா மென்னிக் பார்மிலும் தங்கி வாழ்ந்த போது அரசின் அனுசரணையோடு வீடு கல்வி சுகாதார சதி போன்ற வாழ்வியல் தேவைகளைப் பெற்று ஓரளவு வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் இடம் பெயர்ந்த பின் மிகக் குறுகிய காலத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த போது எந்தவித சிரமமுமின்றி மீளக்குடியேறி வாழ்வதற்கான வசதிகளை மீள் குடியேற்ற அமைச்சு துரிதமாகவும் திருப்திகரமாகவும் செய்த காரணத்தர்ல இம்மக்கள் சொந்த மண்ணில் குடியேறி சுயதொழில் செய்து நிம்மதியாக வாழ்கின்றனர்.

 

வடபுல முஸ்லிம்கள் எதிர் நோக்கும் விஷேட பிரச்சினை.

வடபுல முஸ்லிம்களின் இடப்பெயர்வு 23 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகையால் இத்தனை காலமும் அவரகள் எதிர் நோக்கிய பிரச்சினைகளும் அனுபவித்த கஷ்டங்களும் முற்கூறப்பட்ட தற்காலிக இடப்பெயர்வாளரின் நிலையில் இருந்து முற்றாக வேறுபட்டன. அவற்றுள் சிலவற்றை நோக்குவோம்.
1. வடபுல முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ். தமிழையே கற்று தமிழிலேயே கருமமாற்றிய ஒரு சமூகம். சிங்களம் பேசும் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் அரச நிர்வாக தேவைகளின் போது மொழி ரீதியானதும் கருத்துப் பரிமாற்ற ரீதியானதுமான கஷ்டங்களை வடபுல முஸ்லிம்கள் அனுபவிக்க நேர்ந்தது.

2. வடபுலத்தில் இருந்து ஒருநாள் தவணையில் 55000 குடும்பங்கள் வெளியேற்றப்படதால் உயிரைக்காக்க வடபுலத்தை விட்டு ஓடோடிவந்த இந்த மக்கள் திட்டமிட்டு வாழ்விடங்களைத் தெரிவு செய்து வசதியான இடங்களில் வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குடிநீர் வசதி போக்குவரத்து வசதி போன்ற வாழ்வியல் தேவைகளைப் பெற முடியாத இடங்களிலும் தமது அகதி முகாம்களை அமைத்துக் கொண்டனர். அதன் காரணமாக தமது அடிப்படைத் தேவைகளை இலகுவில் பெற முடியாது நீண்ட கால கஷ்டத்தை அனுபவித்தனர்.

3. துரதிஷ்டசாலிகளான இம்மக்களுக்கு அரச உதவியும் கிடைக்கவில்லை.

4. தங்களை ஆதரித்து உபசரித்த உள்ளுர் மக்களுடன் சுயாதீனமாக இரண்டறக் கலந்து வாழமுடியவிலை. வாழ்க்கை நிலையில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அகதிகளாகவே கணிக்கப்பட்டனர்.

5. வடபுலமே தமது இருப்பிடம் என பதிவு செய்துகொண்ட காரணத்தால் வடமேல் மாகாண நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அரச துறை சார்ந்த நியமனங்களைப் பெற அருகதையற்ற நிலை தோன்றியது.

6. மனிதாபிமான நோக்குடன் தம்மை நாடிவந்த வடபுல அகதிகளை ஆதரித்த மக்கள் தமது பிரதேச வளங்களை நீண்ட காலம் அகதி மக்களுக்கு பகிர்ந்தளித்த போதும் தமது வளம் குறைவதான எண்ணம் தோன்றியது.

7. கல்வி, சுகாதார வசதிகள், தொழில் போன்றவற்றில் உள்ளுர்வாசிகள் அனுபவிக்க வேண்டியவற்றை இடம் பெயர்ந்து வந்தவர்களும் பங்குபோடும் நிலைமையானது ஒரு வித வெறுப்பையும் சலிப்பையும் தோற்றுவித்தது. பாரிய பிரச்சினைகள் தோன்றாவிடினும் உள்ளுர ஒரு வெறுப்புணர்வு நிலை இருந்து கொண்டே வந்நது.

8. சீவனோபாயத்தைத் தேடிக்கொள்ள நிரந்தர தொழில்கள் சார்ந்த நில புலம், கடைகள்,தோணிகள், கடற்றொழில் உரிமை போன்ற வசதிகள் இல்லாத நிலையில் குறைந்த கூலிக்கு தொழில் செய்யும் அன்றாடங் காய்ச்சிகளாய் இவர்கள் அல்லல்பட்டு வாழ நேர்ந்தது.

9. புத்தளம் மாவட்டத்துக்குரிய கோட்;டாவில் இடம் பெயர்ந்த மாணவர் பலர் சர்வகலாசாலைக்கு பிரவேசிக்கும் நிலை தோன்றிய போது சகோதர வாஞ்சையும் நட்புணர்வும் குறைந்தது.
இடம் பெயர்ந்த நிலையிலே இம்மக்கள் எதிர் நோக்கிய அனுபவித்த இன்னல்கள் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எடுத்துக்காட்டப்பட்டன. பிரச்சினைகளை நன்குணர்ந்த நல்லிணக்க ஆணைக்குழுவினர் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.

1. வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனுபவித்துவரும் நீண்டகால கஷ்டங்களை முடிவுக்கு கொண்டுவர திடமானதும் நிலைக்கக் கூடியதுமான வழி வகை காணப்படவேண்டும். இந்த நிலைமை தொடர்ந்தால் அவர்கள் வாழும் இடங்களில் உருவாகி வரும் வெறுப்பும் அபிப்பிராய பேதமும் நீண்டு கொண்டே போகும்.

2. நிரந்தர தீர்வைக் காணக்கூடிய விசேட குழுவொன்று அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட வேண்டும். இடம் பெயர்ந்தவர்களின் கலந்தாலோசனை சுமுகமான தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதே பரிந்துரை.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இந்த விதந்துரைகள் அரசினால் ப10ரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நிதித்தேவை பற்றி ஆராய 2011 ஏப்ரல் மாதம் ஐனாதிபதி செயலணிக் குழுவினால் விசேட கொமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது. மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் ஐனாதிபதி செயலணிக் குழுவின் பிரதிநிதிகளும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்த இந்த கொமிட்டி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய சில அம்சங்களை இனம் கண்டது.

 
1. குடியேறுவதற்கான நிலப்பிரச்சினைக்குத் தீர்வு.

2. வீட்டு வசதி செய்தல்.
3. தெருக்களை அமைத்தல்.
4. கல்வி சார்ந்த தேவைகளை நிறைவு செய்தல்.
5. நீர்ப்பாசன வசதிகளை புதுப்பித்தல்.
6. சுகநலம் தொடர்பான தேவைகளை கவனித்தல்.

மீள் குடியேற்றம் தொடர்பில் காணித்தேவைகளை முதலில் கவனிக்க இந்த கொமிட்டி தீர்மானித்தது. இடம் பெயர்ந்தவர்களின் சொந்தக் குடிநில காணி உறுதிகளும் அரசிடம் பெற்ற பெர்மிட்டுகளும் இல்லாமல் போயுள்ளன. 1990-2009 காலப்பகுதியில் உறுதிகள் பெமிட்டுகள் கச்சேரிகளில் மறைந்து விட்டன. இடம் பெயர்ந்தவர்கள் பயன்படுத்திய காணிகள் இடம்பெயராதவர்களால் 1995இல் அத்துமீறி பிடிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல அத்துமீறி பிடிக்கப்பட்ட காணிகளுக்கு அரச அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. முல்லை மாவட்டத்தில் முஸ்லிம்களின் சொந்தக் காணிகளும் அத்துமீறி பிடிக்கப்பட்டுள்ளதால் மீளக் குடியமர முஸ்லிம்களுக்கு அங்கே சொந்தக் காணி இல்லை. எனவே பிரதேச செயலாளர்கள் மீளக் குடியமரும் மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில்

1. முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் கூழாங்குளம், தம்பட்ட முதலிகட்டு,மேத்தன்வெளி, பண்டாரவெளி,ப10நொச்சிக்குளம், புதுவெளி, முசலி ஆகிய கிராம மக்களுக்குத் தேவையான 770 ஏக்கர் குடிநிலக் காணியை வன பரிபாலன இலாக்காவிடம் பெற பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தார். மறிச்சுக்கட்டி சிலாபத்துறை வீதியில் 23-29 ஆம் மைல் நடுகட்டைக்குள் பாதையின் இரு மருங்கும் உள்ள 250 மீட்டர் அகலமான காணி அடையாளமிடப்பட்டது. அகத்திமுறிப்பு, பிச்சைவாணியன்குளம், பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, வேப்பங்குளம் கிராமத்தவரின் தேவைக்கு பிச்சைவாணியன் குளத்தில் நிலமற்றவர்களுக்கு வழங்க தெருவின் இருமருங்கும் அமைந்த 865 ஏக்கர் காணி இனங்கண்டு அடையாளமிடப்பட்டு வன பரிபாலன இலாக்காவில் பெற பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.

 
2. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணாட்டி, மினுக்கன் சொர்ணபுரி, வட்டக்கண்டல், ஆண்டான்குளம்,பாப்பாமோட்டை கிராமத்தில் காணியற்றோருக்கு வழங்க விடத்தல்தீவு – சன்னாரில் 300 ஏக்கர் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காயார் நகர் மக்களுக்கான காணி 375 ஏக்கரை பெரிய மடுவிலேயே பிரதேச செயலாளர் மூலம் வனபரிபாலன இலாக்காவில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சாலம்பைக்குள மக்களுக்கான காணி சூடுவெந்தபுலவில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முல்லை மாவட்டத்தில் மெரிட்டன் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஹிஜ்ராபுரம், கணுக்கேணிமேற்கு, குமாரபுரம் முல்லைத்தீவு நகரம்ää நீராவிப்பிட்டி கிழக்கு, மேற்கு, தண்ணீரூற்று கிழக்கு – மேற்கு, வண்ணான்குளம் ஆகிய கிறாமங்களுக்கு வேண்டிய 540 ஏக்கர் காணி மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் 6ஆம் கட்டையடியில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முத்தையன் கட்டில் உள்ள 38 குடும்பங்களுக்கான காணியை முத்தையன் கட்டிலேயே பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருமருகண்டியில் 237 குடும்பங்களுக்கான காணி (148 ஏக்கர்) ஒட்டுசுட்டானில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செயலணிக்குழுவினர் மன்னார் மாவட்டத்தை தரிசித்த போது காணியற்றோருக்கு அரச காணி வழங்க பின்வருமாறு பரிந்துரை செய்தனர். பாலைக்குழி – 100ஏக்கர் மறிச்சுக்கட்டி – 100ஏக்கர் கரடிக்குழி – 80ஏக்கர் காக்கையன் குளம் – 500ஏக்கர் சன்னார்,விடத்தல் தீவு என மொத்தம் 1080 ஏக்கர் அரச காணி பெற பரிந்துரை செய்தனர்.

மீள் குடியேற 22000 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் தற்போது 15000 குடும்பங்களே குடியேறியுள்ளன. நிலமின்மை காரணமாகவே மிகுதிக்குடும்பங்கள் குடியேற்றத்தை தாமதப்படுத்துகின்றன. எனவேதான் பிரதேச செயலாளர்கள் வனபரிபாலன இலாகாவிடம் காணி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஐனாதிபதி செயலணிக்குழுவினது பரிந்துரைக்கு அமைவாகவே காணிப்பங்கீடு செயல்படுத்தப்படுகிறது.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டைப் பிரிக்க எத்தனித்தவர்கள் அல்லர். பிரிவினைக் கொள்கை எமது அகராதியில் இல்லை. நாம் வாழும் தாய் நாட்டுக்கு சரித்திர காலம் தொடக்கம் விசுவாசமாக வாழ்ந்து வந்துள்ளோம். இனியும் அதே நிலைதான். விடுதலை புலிகளின் தனித்தமிழ் ஈழக் கொள்கைக்கு உடலாலும் உள்ளத்தாலும் நாம் ஆதரவு அளிக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்களது கொடிய தண்டனைக்கு ஆளானோம். 23 ஆண்டுகள் சுயாதீன வாழ்வின்றி சுகமிழந்து தவிக்கும் நாம் சொந்த மண்ணில் சுகம் காண விரும்புகிறோம். காடாகி விட்ட எமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்யும் போது வில்பத்து சரணாலயத்தை ஆக்கிரமிப்பதாகவும் முஸ்லிம் குடியிருப்புக்களை அமைக்க எத்தனிப்பதாகவும் கற்பனைக் கதைகள் வெளிவருகின்றன. இந்தக கதையில் எதுவித உண்மையும் இல்லை. ஆதாரமற்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டு இது.

எமது மாவட்ட எம்.பி அமைச்சர் றிஷாட் குடியேற்றத்துக்கான காணி விஷயத்தில் தன்னிச்சையாக செயற்படவில்லை. ஐனாதிபதி செயலணிக்குழுவின் விதந்துரைக்கு அமையவே காணி பெற முயற்சித்தார். எனவே அவர் மீதும் வடபுல முஸ்லிம்கள் மீதும் வீண்குற்றம் சுமத்த வேண்டாம் என சிங்கள பௌத்த கடும் போக்காளர்களை விநயமுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பௌத்த சமயத்தையும் பௌத்தர்களையும் என்றும் மதித்து வாழ்ந்தவர்கள் நாம். ஒரே நாடு, ஒரே நாட்டு மக்கள் என்ற தாரக மந்திரத்துடன் போரை முடிவுக்கு கொண்டு வந்த மாண்புமிகு ஐனாதிபதி அவர்களையும் அவர்களின் அரசையும் நன்றியுடன் போற்றி வருகிறோம். எனவே சிங்கள கடும் போக்காளர்களும் தமிழ் இனவாதிகளும் முஸ்லிம்கள் இந்தாட்டு பிரசைகள் என்ற தயாள சிந்தையுடன் அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு உதவி நல்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *