Breaking
Wed. Apr 24th, 2024

    இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்  –

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில் :–

இன்று வடபுலத்து முஸ்லிம்கள் கௌரமானதொரு மீள்குடியேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் என்பதை எவரும் மறந்து செயற்பட முடியாது. நாம் அகதிகளாக சென்றபோது முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்தபோது எமக்கு உதவி செய்தார்கள், அவர்களது செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆனால், எப்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பாராளுமன்றம் சென்றார்களோ அன்று முதல் அவரது அயராத சேவை இந்த முசலி மக்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.

தன்னளமற்ற பொது நலத்தினை இலக்காக கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிக்கு கொடுத்த கௌரவம் ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்துவம்,அதனை நாம் இழந்துள்ளோம்.இந்த பிரதி நிதித்துவத்தின் ஊடாக எத்ர்பார்த்தவை இடம் பெறவில்லை என்பதை இன்று ஊடகங்கள் கூறிக் கொண்டே இருக்கின்றன.ஆனால் நல்லதை மக்களுக்கு செய்து முசலி வராற்றில் பதியப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளார்.

எம்மை நாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீண்டும் வாழ் வழி செய்து கொடுத்தமை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்ய குற்றமா?இப்பிரதேச மக்களுக்கான காணியினை உரிய முறையில் பெற்றுத் தந்தமை குற்றமா?இருப்பதற்கு வீடுகளை அமைத்து தந்தமைய குற்றமா?இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தமை அவர் செய்த குற்றமா?இது போன்று இன்னும் எத்தனை எத்தனை பணிகளை அவர் எமது மக்களுக்கு செய்து தந்து குற்றம் என்றால் எதையும் மக்களுக்கு செய்யாமல் எம்மை இந்த பூமியில் இருந்து வெளியேற்ற துடிக்கும் சக்திகளுடன் கைகோர்த்து வங்குரோத்து அரசியல் செய்பவர்கள் தான் உயர்ந்தவர்களா  என கேட்கவிரும்புகின்றேன்.

இன்று வடக்கு தமிழ் சகோதரர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அணியில் ஒன்றுபட்டுள்ளனர்.இது ஏனெனில் நாம் அவர்களிடம் கேட்டோம்,அதற்கு அவர்கள் கூறும் பதில் தான்,இனம் கடந்து மனித நேயத்துடன் பணியாற்றும் அரசியலில் சாணக்கியம் கொண்ட தலைவர் என அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தான் எந்த சக்திகள் வந்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலும்,அதனை எதிர் கொண்டு அந்த சக்திகளை இந்த மண்ணின் வாசத்தை கூட நுகர விடாது விரட்டியடிக்க வேண்டிய நேரம் வாக்குகள் மூலம் எமக்கு கிடைத்துள்ளது.

முசலி மக்கள் நன்றி மறவாதவர்கள் என்பதை இந்த நாட்டுக்கு எடுத்தியம்பும் வகையில் எதிர்வரும் தேர்தலில் முசலி மக்கள் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய தலைவரையும்,ஏனைய வேட்பாளர்களையும் வெற்றியடையச் செய்யும் போராட்டத்தில் களம் இறங்க தயாராகுமாறும் முஹம்மத் காமில் அழைப்பு விடுத்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *