Breaking
Thu. Apr 25th, 2024

வாக்குகளுக்காக இன வாதத்தை தூண்டி இன, நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

சிலர் உயர்ந்த சபையில் இனவாத பேச்சுக்களை பேசி இனவாதத்தை கக்கும் சக தமிழ் பேசும் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். சஹ்ரானின் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவருக்கு தலைவர் இருப்பதாகும் கூறும் இவ்வாறான உறுப்பினர் இதை அரசின் பாதுகாப்பு பிரிவுக்கு சொல்ல வேண்டும் நாடாளுமன்றில் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவின் முன் சொல்ல வேண்டும் மாறாக இன வாத பேச்சுக்களை பேசி இனநல்லுறவை சீர் குழைத்து வாக்குகளை பெற முயற்சிக்காதீர்கள்.இதனால் நாட்டில் சட்ட திட்டங்கள் புலனாய்வு பிரிவு என்பன கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாதியல்ல முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நாட்டின் அரசியல் சட்ட திட்டங்களுக்கும் ஆட்சிக்கும் இணைந்து செயற்பட்டவர்கள் முஸ்லிம்களிடத்தில் பயங்கரவாதம் இல்லை அப்படி இருந்தால்  காட்டிக் கொடுங்கள் நாடாளுமன்றத்தில் இப்படி இனவாத பேச்சுக்களை பேசும் கோடிஸ்வரன் இதனால் மக்களின் வாக்குகளை பெற முடியாது .

22 இலட்சம் முஸ்லிம்களும் சஹ்ரான் பயங்கரவாதி எனக் கூறியபோதும் அவனுக்கு தலைவர் இருப்பதாக கூறுவது வெறும் இனமதவாதத்தை தூண்டும் செயலாகும்  இவ்வாறான பேச்சுகளை பேசி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attachments area

Related Post