Breaking
Thu. Apr 25th, 2024

முதல் முறையாக வியட்னாம் –  இலங்கை இடையிலான உத்தியோகபூர்வ கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான (Joint Trade Sub Committee) செயல்முறை ஆகஸ்ட் 21 ஆம் திகதி   வியட்னாம் ஹனோய் நகரில் வைத்து நடைமுறைக்கு வந்தது.   

 
வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான   செயல்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு வியட்னாம் அரசு  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விசேட அழைப்பை விடுத்திருந்தது.
அதன் பொருட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த செவ்வாய் கிழமை (20) வியட்னாம்  சென்றிருந்தார். அமைச்சருடன் வியட்னாமுக்கான இலங்கை தூதுவர் ஐவன் அமரசிங்க ,அமைச்சரின் ஊடக செயலாளர் ஜோசப் தவராஜா மற்றும் இலங்கை வர்த்தக சிரேஷ் உயர் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் சென்றிந்தனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்நாட்டின்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் வு ஹுய் ஓஹங் மற்றும்   வியட்னாம்    வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோருடனும்  இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு வர்த்தக உப கமிட்டியினை நிறுவுவதற்கான இருதரப்பு விவாதங்களின் அமர்வுகளிலும் கலந்துக்கொண்டார்.
வியட்னாம் ஹனோய் பகுதியில் அமைந்துள்ள வியட்னாம் கைத்தொழில் மற்றும்வர்த்தக அமைச்சின் தலைமையகத்தில் இவ் அமர்வுகள் இடம்பெற்றன. இந்த அமர்வில் அமைச்சர் ரிஷாட்  உரையாற்றகையில் தெரிவித்ததாவது:
 
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் எனது அமைச்சு இருதரப்பு முன்னேற்றங்ளை நெருக்கமாக கண்காணிக்கும்.
 
 
யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மூலோபாயங்கள்- வறுமை ஒழிப்பு மற்றும்  பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையினுடைய முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.  மஹிந்த சிந்தனை அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் மனித அபிவிருத்தி சுட்டெண் தரவரிசைவறுமை குறைப்பு,   சர்வதேச பொருளாதார வளர்ச்சி கொள்கைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மூலோபாயம் வழிக்காட்டல் ஊடாக இலங்கையின் முன்னேற்றங்களையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட  பொருளாதார அபிவிருத்தி  வேலைத் திட்டங்கள் எண்ணிலடங்காதவை.இன்று எமது அரசு முப்பது வருட   யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் அபிவிருத்தியில் பயனடைய வைப்பதில் மிகவும் விரைவாகவும்துரிதமாகவும் செயற்பட்டு வருகின்றது.
 
மஹிந்த சிந்தனை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக 2006 முதல் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டில் அமைதி ஏற்பட்டு அதற்கு சாதகமான சூழலும் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குறிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளோம்.
அதன் பின்னர் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் விவசாயநிர்மாண,கடற்றொழில்சுற்றுலா மற்றும் சேவைகள் துறையில் பாரிய இலக்கை எட்ட முடியும்.
நாம் திட்டமிட்டுள்ள இலக்கை அடைவது என்பது எளிதானதல்ல. இதனை எட்டுவதற்கு எமது திட்டங்களும் கொள்கைகளும் முழுமூச்சாக செயற்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் மஹிந்த சிந்தனை ஊடாக நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்குரிய உண்மை நிலையை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் இது தொடர்பாக தெளிவு பெற்றாலேயே இலக்கை அடைவது எமக்கு எளிதானதாக இருக்கும்.
உண்மையில்இலங்கையிலிருந்த வியட்னாம் ஐந்து மைய மூலோபாயம் பற்றி கற்க வேண்டும். சமூக அபிவிருத்திக்கு பிரயோகிக்க கூடிய நல்ல விடயங்கள் நம் நாட்டின உள்ளன. அத்துடன் உலக பொருளாதார மந்த நிலை காரணமாக வியட்நானமும் இலங்கை போன்று பொருளாதாரத்தில்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டது. இருந்த போதிலும் வியட்னாம் 2013 ஆம் ஆண்டு 5.32மூ சத வீதம்  அதன்  வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்ததுடன்  2014 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5.5மூ சத வீதம் வளாச்சியையும் ஈட்டியள்ளது. 2013 ஆம் ஆண்டில் 6.2மூ சத வீதமாக காணப்பட்ட எமது பணவீக்கம் 2014 ஆம் ஆண்டில்  1.45மூ சத வீதமாக  முதல் ஏழு மாதங்களில் மிக குறைவாக சரிந்தது!  2013 ஆம் ஆண்டில் நமது மொத்த சர்வதேச வர்த்தகம், 266பில்லியனாக அமெரிக்க டொலராக இருந்தது. இதனை 300 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். 2013 ஆம் ஆண்டு நாம் எமது வீட்டு வறுமையை 9மூ சத வீதத்திற்கு கொண்டுவர முடிந்தது. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கும் முதலீடுகளுக்கும் பரந்த சாத்தியம் நிறைய உள்ளது. தற்போதைய வர்த்தக தொகுதிகள் குறைவாக  உள்ளதால்  இரு நாடுகள் இடையில் நிலவும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு இணையாக இல்லை மற்றும் புதிய நகர்வுகளுக்கான பரந்த சாத்தியங்கள் உள்ளதாலும் நாம் ஒன்றாக செயற்பட வேண்டும். வியட்னாமும் இலங்கையும் பொருளாதாரம்வர்த்தகம்முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும்அவை இன்னும் அதன் முழுமையான ஆற்றல் வளத்தை அடையவில்லை. இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இருதரப்பு வர்த்தகத்தினை அதிகரிக்க செய்யும்.குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் இது சாதகமாக அமையும்.அத்துடன்  இருதரப்பினரும் குறைந்த பட்சம் சலுகையுடன்கூடிய  வர்த்தக ஒப்பந்தத்தினை பரிசீலிக்க வேண்டும்‘ என இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான் இருவாரங்களுக்கு முன்னர்   விசேட அழைப்பையடுத்து எமது அலுவலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார். 
 
வியட்னாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் வு ஹுய் ஓஹங் பேசுகையில்: தற்போது நிறுவப்பட்டுள்ள கூட்டு வர்த்தக உப கமிட்டியை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலங்கையின் பக்கத்தில் இருந்து எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என  நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இலங்கையின் திட்டத்தையும்  கவனத்தில் எடுத்துஇந்த முயற்சிக்கு வியட்னாமில்  பொருத்தமான தொடர்புடைய முகவர்களை ஈடுபடுத்துவோம். இது தொடர்பில் இரு தரப்பினரும்   தங்கள் பரிமாற்றங்ளை தொடர வேண்டும். கூட்டு வர்த்தக உப கமிட்டியின் செயற்பாட்டனை தொடாந்து    இரு நாடுகளுக்கும் இடையே விருப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை  கற்க வேணடியது மிகவும் நடைமுறை வழியாகும்.
 
வலுவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம் இன்று நம் ஏற்றுமதி சாதனையாக 130 பில்லியன் அமெரிக்க டொலரினை அடைந்துள்ளோம். தற்போது வியட்நாம், 40 வது ஏற்றுமதி இலக்கையும் 23 விநியோகஸ்தருக்கான இடத்திலும் இருக்கின்றது.   எமது மொத்த ஏற்றுமதி  0.43மூ சத வீதத்தினையும் எமது மொத்த இறக்குமதி 1.06மூ சத வீதத்தினையும் முறையே  பங்களிப்பு செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே மொத்த வர்த்தகம்  2012 ஆம் ஆண்டில்119.5 மில்லியன் அமெரிக்க டொலரை பதிவு செய்தது. இது 2013 ஆம் ஆண்டில்  224,4 மில்லியன் டொலராக  அதிகரித்துடன் 88மூ சத வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நிலைநிறுத்தியது.
 
2009 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாமுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பயனாக இருநாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளன. 
 
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் பயனாக இரு நாடுகளும் நன்மை பெற்றுக் கொள்ளக் கூடிய இரு நாட்டுத் தலைவர்களதும் முன்னிலையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கலாசாரம்முதலீடுமீன்பிடி,விவசாயம்குற்றச் செயல் தடுப்பு ஆகிய ஐந்து அம்சங்களிலேயே இவ்வுடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வர்த்தக ரீதியாகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் வியட்னாம்   2010 ஆம் ஆண்டில் வேகமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *