Breaking
Fri. Apr 19th, 2024

– எம்.எம்.ஏ.ஸமட்
ஊடகம் என்பது மக்களிடையே கருத்துக்களைக் காவிச் செல்லுகின்ற, பரப்புகின்ற செயற்பாட்டைக் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாகச் சொல்வதானால், கருத்தியலைக் கட்டமைப்பது, மக்களினதும் சமூகத்தினதும் இருப்பைத் தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் வளர்;ச்சிக்கும் விருத்திக்கும் ஊக்கியாக செயற்படுவது என அதன் பங்களிப்பு உள்ளது, அதுதவிர, அரசியல், தத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், பொறியியல் என்ற பல்வேறு துறை சார்ந்த விடயங்களிலும் அதன் செல்வாக்கை காலூண்டியதொன்றாக ஊடகத்துறை வியாபித்திருக்கிறது.
ஊடகங்கள் இல்லாத தேசத்தையோ, அதன் தாக்கத்திற்கு அகப்படாத மனித குலத்தையோ, துறைகளையோ நவயுகத்தில் காணவே முடியாது. நாம் குடிப்பது முதல் உடுப்பது வரை சகலவற்றுக்கும் கட்டளையிடும் ஒரு எஜமான் போன்று ஊடகங்கள் காணப்படுகிறது என்று கூறினால் அது கூட பொய்யாகாது. அந்தளவு செல்வாக்குச் செலுத்துமொரு சக்திமிக்க துறையாக ஊடகத்துறை மிளிர்கிறது.
ஒரு நாட்டின் முக்கிய துறைகளாக நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் ஊடகத்துறை என்பன உள்ளன. இந்ந நான்கு துறைகளில் ஊடகத்துறையானது ஏனைய 3 துறைகளிலும் காணப்படும் பலத்தையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து, நெறிப்படுத்தும் சக்தி வாய்ந்ததொரு பணியை புரியுகிறது.
இவ்வாறு புரியப்படும் பணிகள் ஊடகத்தர்மத்தை மீறாத வகையிலும், சர்வதேச மட்டத்திலும,; தேசிய மட்டத்திலும் ஊடகத்துறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கோவைகளுக்கு ஏற்பவும், ஊடகச் சுதந்திரத்தை எல்லை மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படுதலும் காலத்தின் அவசியமாகும்.
1980க்கு முற்பட்ட காலங்களில் இலங்கையில் ஊடகத்துறையானது இன்றுள்ளதுபோன்று பெரியளவில் மக்களிடையே தாக்கத்தைச் செலுத்தியிருக்கவில்லை. அக்காலத்தில் அச்சு, இலத்திரனியில் ஊடகங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால,; தற்போது இலங்கையில், 15 தொலைக்காட்சி அலைவரிசைகளும், 41 வானொலி சேவைகளும் 31 தினசரி பத்திரிகைகளும், 61 வாராந்த மற்றும் மாதாந்த பத்திரிகைகளும் அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களும் உள்ளன. ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஊடக நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகப் போட்டிகளும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களுக்கிடையே செய்திகளை மக்களுக்கு வழங்குவதிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளை கொடுப்பதிலும் உள்ள போட்டிகளும,; அவசரங்களும் சில சந்தர்ப்பங்களில் இவ்வூடகங்களைச் சிக்கல்களுக்குள்ளும் தள்ளிவிடுகிறது. ஒரிரு தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளினூடாக தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற செய்தித் தொகுப்புக்களும,; விமர்சனங்களும் அரசையும் மக்களையும் விழிப்படையச் செய்வதாகக் காட்டப்பட்டாலும், ஊடகங்களின் பொறுப்புக்களாகச் சித்தரிக்கப்பட்டாலும், சட்டவிரோத நடவடிக்கைகளையும், ஊழல்களையும், அக்கிரமங்களையும், அம்பலப்படுத்தி, ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துரிமைக்கும் பொது நலனுக்கும் மதிப்பளிப்பதாகவும், குரல் கொடுப்பதுபோன்றும் வெளிக்காட்டபபட்டாலும் அதன் பின்புலம் தமக்கு வேண்டப்படாத ஒரு தனிநபருக்கு எதிராக அல்லது ஒரு சமூகத்தின் எழுச்சிக் எதிராக செயற்படுகிறதாகவே சிந்திக்கச் செய்கிறது. சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது. இவ்வாறானதொரு ஊடகத் தாக்குல் களத்தின் கருப் பொருளாக இன்று வில்பத்து வனமும் அப்பிரசேத்தின் மக்கள் பிரநிதியும் உள்ளாகியிருப்பது மக்கள் அறிந்ததொன்றாகும்.
வில்பத்தும் செய்திகளும்.
இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலும் சுதந்திரமடைந்ததன் பிற்பாடும் இந்நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளுக்கு எதிராகவும் பேரினவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழக் கூடாது என்பதில் கங்கணம்கட்டிக்கொண்டு செயற்படுகின்ற பேரினவாதம் அதன் இலக்கை அடைந்து கொள்வதற்காக காலத்திற்குக் காலம் இம்மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறது. பேரினவாதத்தின் இலக்கில் பேறுபாடுகளைக் காண முடியாது. அத்தகையைதொரு நிலையை கடந்த ஆட்சிக்காலத்தில் இந்நாட்டு மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். இப்பேரினவாதத்திற்கு திணீபோடும் வகையில் குறித்த ஊடகச் செயற்படு பெரும் கவலையளிக்கிறது.
நல்லாட்சி இடம்பெறும் இக்காலத்தில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான முஸ்திப்புகள் இடம்பெறுவது முதல்; ஊடக அடக்கு முறையின்றி சுதந்;திரமாக ஊடகங்கள் செயற்படுவதற்கும் வழி ஏற்பட்டுள்ளமை இந்நாடு பெற்ற சுதந்திரத்தை மக்களும் ஊடகத்துறையும் சுதந்திரமாக சுவாசிக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே கருதவேண்டியுள்ளது
ஆனால், அத்தகைய ஊடக சுதந்திரம் ஒரு தனிநபர்களைப் பலி தீர்;பதற்காக அல்லது ஒரு சமூதாயத்தைக் கேவலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவவே கவலையளிக்கும் விடயமாகவுள்ளது
ஒரு ஊடகவியலாளரின் ஆசாபாசங்கள், நலன்கள், கருத்துக்களை விட அவ்வூடகத்தை நேசிக்கின்ற அவ்வூடக செயற்பாடுகளுக்கு புத்துயிர்ப்பு வழங்குகின்ற ரசியர் சமுதாயத்தின் ஆசைகளுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவது ஊடக நிறுவனமொன்றின் தலையாய கடமையாகும். ஆனால் விலப்பத்து காடழிப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான ஊடகச் செய்திகளில் அந்தகையதொரு பொறுப்பும் ரசிக சமுதாயத்திற்கு மதிப்பளிக்கும் தன்மையும் ஊடக நிறுவனத்தினால் கடைபிடிக்கப்படுகிறா என்பது கேள்விக்குறியாகும்.
ஏறக்குறைய ஒருவார காலமாக வில்பத்து காடழிப்பு தொடாபில் பல்வேறு செய்திகள் தொடர்ச்சியாக குறித்த தொலைக்காட்சி செய்தியறிக்கையினூடாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விடயத்தில் பல்வேறு தரப்புக்களினதும் கருத்துக்களும் மறுப்புக்களும் வெளிவந்து கொண்டிருந்தும் இதற்கான தொரு முற்றுப்புள்ளி; இக்கட்டுரை எழுதும் நேரம் வரை ஊடக மட்டத்தில் வைக்கப்பட்டதாக அறியவரவில்லை.
மன்னாரை அண்டியுள்ள வில்பத்து வனம் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் அப்பிரதேச மக்கள் பிரதிநிதியொருவரினால் அவர்சார்;ந்த சமூகத்தை குடியமர்த்தியுள்ளதாக குறித்த ஊடகக் காணொலிகள் தொடர்ச்சியாகக் காண்பித்து வரும் நிலையில், இவற்றில் உண்மைத்தன்மை இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ள ஊடகச் செய்தியில் வில்பத்து தேசிய வனத்திற்குள் எவ்விதமான மக்கள் குடியிருப்புக்களும் இல்லையென்றும் வனத்தை அண்டிய சரணாலயப் பகுதியிலேயே குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தில் இதற்கு இடமுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் அத்துடன், வில்பத்து தேசிய வனத்திற்குள் அங்குலம் அங்குலமாக தான் பயணித்துள்தாகவும், இந்த வனப்பகுதிக்குள் எவ்வித மக்கள் குடியிருப்புக்களும் இல்லையென்றும் காட்டை அண்டிய பிரதேசத்தில் வனப்பாதுகாப்பு ஜீவராசிகள் திணைக்களம், அமைச்சு மற்றும் அரச அதிபரின் அனுமதியுடன் வீடுகளை அமைக்கலாம் எனவும் அமைச்சரின் செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான செய்திகளை பல அமைப்புக்களும் வெளியிட்டு வருகின்றன. ஜனாதிபதியும் இது தொடர்பில் விசாரிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அப்பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவற்றிற்கு நீதி வழங்கு சடடத்தின் பொறுப்பாகும். இவ்வாறான நிலையில் இவ்விடயத்தினை குறித்த ஊடகம் ஊதிப் பெருப்பிப்பதன் நோக்கம் அதன் இலக்கு என்ன என்ற கேள்வி தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஒரு நாட்டில் இடம்பெறும் அல்லது இடம்பெற்ற முக்கியமானதொரு விடயத்திற்காகவேதான் ஊடகங்களில் விஷேட செய்தி ஒளிபரப்பப்படுவது வழமை. ஆனால் இப்பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்தமையை குறித்த ஊடகம் விஷேட செய்தியாக ‘பிரேக்கின் நியூஸ்’ என்று ஒளிபரப்பியது. இதன் தொடர்ச்சியில் பார்க்கின்றபோது இதன் பின்புலம் சிறுபிள்ளைக்கும் புரிதலுடையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விடயத்தினை உளவியல் ரீதியில் வௌ;வேறு கண்னோட்டத்தில் நோக்கவும் முடியும்.
குறித்த ஊடகம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்குமாயின் அல்லது அவ்வூடகத்தின் செய்தித் தொகுப்பு முதல் ஏனைய நிகழ்ச்சிகள் தரம் குறைந்ததாக மாறுகின்றபோது அவ்வூடகம் தொடர்பான பதிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, அவ்வூடத்தின் செய்தித் தொகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளின் பால் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பிரபல்யமிக்கவர்களை தொடர்ச்சியாக விமர்சிப்பது அல்லது ஒரு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அல்லது அம்மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு தனிநபர் குறித்து தொடர்ச்சியாக விமர்சனத்திற்குள்ளாக்குகின்றபோது, அவர் சார்ந்த மக்களும் அவர் சாhரத மக்களும் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் மன நிலைக்குத்தள்ளப்படுவா.; இதனால் குறித்த ஊடகச் செய்தித் தொகுப்பு பற்றியும் அவ்வூடகம் குறித்தும் மக்கள் மனங்களில் ஒரு பதிவு ஏற்படும். ஆவை பேசப்படும். அவ்வாறானதொரு நிலை தற்போது மன்னார் பிரதேச மக்களிடையே காண கூடியதாக இருப்து தெரிய வருகிறது.
இரண்டாவது விடயம். குறித்த ஊடகத்தினால் விமர்ச்சிக்கப்படுகின்ற பிரபல்யங்கள், தனிநபர் சார்ந்த மக்கள் மத்தியில் இவ்வூடகச் செய்தித் தொகுப்பை வழங்குபவர் யார் என்ற தேடல் ஏற்பட்டு அத்தொகுப்புக்குப் பொறுப்பான நபரின் பெயரும் மக்கள் மனங்களில் பிரபல்யம் பெற்றுக்கொள்ளும் என்ற இரு வேறு உளவியல் பார்வையும் உள்ளது. இவை எதுவாக இருந்தாலும,; ஊடகமானது அதன் எல்லைதான்டி செல்லக் கூடாது என்பதும் அதன் இலக்கு மாறக் கூடாது என்பதும,; ஊடக தர்மத்தை அசிங்கப்படுத்த முற்படக் கூடாது என்பதும் ஊடகத்தை நேசிக்கின்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஊடகத் தர்மமும் நோக்கங்களும்
பொதுவாக ஊடகங்கள் நான்கு நோக்கங்களைக் கொண்டு செயற்படுகின்றன தகவல் தெரிவித்தல், பயிற்றுவித்தல், விழிப்புணர்வூட்டல் மற்றும் பொழுதுபோக்கு. இந்நான்கு நோக்கங்களையும் நிறைவேற்றுவதில் ஊடக தர்மம் காக்கப்படுவது அவசியமாகும். ஊடக ஒழுக்கக் கோவையை மீறி அல்லது ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து இவ்விலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள ஊடக நிறுவனமோ அல்லது ஊடகவியலாளர்களோ முனைவது சக்திமிக்க ஊடகத்துறைக்குச் செய்யும் பெரும் துரோமாகும். ஊடகத்தினூடாக விழிப்புணர்வுட்டுகின்றோம் அல்லது தகவல்களைத் தெரிவிக்கின்றோம் என்பதற்காக பிரபல்யங்களைக் கீறிக்கிழிப்பது, ஒரு தனிநபரை பலிதீர்ப்;பது, அல்லது ஒரு சமூகத்தை சந்திசிரிக்கச் செய்வதென்பதெல்லாம் ஊடக தர்மமாகாது. ஊடகங்கள் எதைத் தெரிவிக்கிறதோ அதை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற மனப்பாங்கு ஊடக நிறுவனத்திடமும் ஊடகவியலாளர்களிடமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால,; இந்த மனப்பாங்குகள் அவர்களுக்கு எதிராக மக்கள் சக்தி திசை திருப்பாதா என்ற கேள்வியும் உள்ளது.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியும் ஒரு தனித்திறமை வாய்ந்த ஊடகவியலாளர்தான். அவர் ஓரே காலத்தில் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சமூகங்ளைப் பிரித்தாளாது சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி ஒரு பெரும் தேசத்திற்கே சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு பெரும் கைகொடுத்தது அவரின் ஊடகப் பணி என்பதை சமூகங்களைப் பிரித்தாளும் மனப்பாங்கு கொண்டு அதற்காக தாம் பணிபுரியும் அல்லது தமக்கு சகல வகையிலும் உதவும் ஊடகங்களைப் பயன்படுத்துகின்ற சமகால ஊடகவியலாளர்களின் புரிதலுக்காக சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது.
ஊடகம் சக்தி மிக்க என்பதும் சக்தி மிக்க ஊடகத்தினால் எதையும் சாதித்து விட முடியும் என்பதும் பல சந்தர்ப்பங்களில் சரியா இருந்தாலும,; அச்சக்தியை முறையாக மேற்கொள்வதும் அவசியமாகும். இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், புரிந்துணர்வுடனும், புரிதலுடனும் வாழ வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட ஆட்சி மாற்றதினால் குறிப்பாக ஊடகத்துறையானது இருட்றையிலிருந்து வெளிச்சத்தை நோக்கிப் பயணிப்பதற்கான விடுதலையைப் பெற்றிருக்கிறது. கடந்த ஆட்சியில் இல்லாத ஊடகச் சுதந்திரத்தை கடந்த 5 மாதங்களாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அனுபவித்து வருவதை மறுக்க முடியாது.
கிடைக்கப்பெற்றுள்ள ஊடக சுதந்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்த முனைவது ஊடக தர்மமுமாகாது. தனிநபர்களை பலிதீர்க்கவோ அல்லது ஒரு சமூக்தைக் காட்டிக்கொடுக்கவோ, சமூகங்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தவோ, பகைமை உணர்வுகளைத் தூண்டவோ ஊடக நிறுவனமோ ஊடகவியலாளர்களோ முனைவது எந்த விதத்திலும் ஊடக நீதியாகாது. ஊடகத் தர்மமும், ஊடக ஒழுக்கக் கோவையும் முறையாகப் பின்பற்றப்படுவதும் ஊடகங்களின் இலக்குகள் முறையாக மேற்கொள்ளப்படுவதும் காலத்தின் தேவையாகவுள்ளது.
ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் ஒரு தனிநபரை அல்லது ஒரு சமூகத்தை தாக்கும் களமாக ஊடகத்தைச் செயற்படுத்தாது தமது ஊடகச் செயற்பாட்டினூடாக தனிநபர்களிடையேயும் சமூகங்களுக்கிடையேயும் புரிந்துணர்வுவையும,; ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அத்தோடுஈ ஊடக இலக்குகள் மக்களையும், வளரும் இளம் சமூதாயத்தையும் நல்வழிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதனூடாக ஊடகத்தர்மத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பேணிச் செயற்பட்ட ஊடக நிறுவனங்களாவும் ஊடகவிளலாளர்களாவும் வரலாற்றில தடம்பதிக்க முடியும் அவ்வாறானதொரு ஊடகத் தர்மம்காத்துச் செயற்படுகின்ற ஊடகச் கலாசாரம் இந்நாட்டில் மலர வேண்டும் அதற்காக ஒவ்வொரு ஊடகமும் ஊடகவியலாளரும் முயற்சிக்க வேண்டுமென்பதை காலத்தின் தேவையாக இக்கட்டுரை முன்வைக்கிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *