Breaking
Tue. Apr 23rd, 2024
நாட்டில் நிலையான ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாபர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சிறுபான்மை சமூகம் உணர்வுகளை மதித்து அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அப்போது தான் நாம் நிம்மதியாக தலை நிமிர்ந்து பகலிலும் இரவிலும் தூங்க முடியும் .இனவாதத்தை கக்கும் பாராளுமன்றில் அதுரலிய ரதனதேரர் எஸ்.பி திசாநாமக்க விமல் வீரவம்ச, உதயகம்மன்பில போன்றோர்கள் மொட்டுக்கு ஆதரவளிக்கிறார்கள் இதை உணர்ந்து கொண்டாவது முஸ்லிம் சமூகம் சிந்தித்து சஜீத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் .கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோமோ அது போன்று கோட்டாவையும் வீட்டுக்கு அனுப்புவோம் ஒன்றாய் ஓரனியில் நின்று சிறந்த தலைமைத்துவத்தை தெரிவு செயவோம் .
சமூகம் சிந்தித்து வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம் கோடாரி பாம்புகள் போன்று எமது சமூகத்தை சீர்குழைக்க முற்படுகிறார்கள் இதனை கண்டு நாம் ஒரு போதும ஏமாற வேண்டாம்.நமது சமூகத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தியோருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்
 இந்த நாளில் பகிரங்கமாக வாக்களித்து ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் என்கிற தலைவனை தெரிவு செய்ய வேண்டும் .
அநியாயமாக அட்டூழியமாக மதஸ்தளங்களை,பர்தாவை, குர்ஆனை ,ஹதீஸை நாசமாக்கிய இனவாத கும்பல்களை முறியடித்து சிறத்த தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தினை விற்கும் ஏஜன்ட்டுகள் இருக்கிறது இதை தான் அன்றைய 2015 ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பலத்தை காட்டியுள்ளார்கள்
 இதில் தோல்வியுற்ற மகனே காத்தான்குடி ஹிஸ்புல்லா இது போன்று அதாவுல்லா போன்றவர்கள் செயற்படுகிறார்கள் இங்கு கிண்ணியாவில் நஜீப் ஏ மஜீத் இவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கி மீளவும் குறைய வாய்ப்புள்ளது எனவே முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதித்து புதிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

Related Post