2மில்லியன் பெறுமதியான பொதுநோக்கு மண்டபம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் பெரியமடு காயாநகர் மக்களுக்கான பொதுநோக்கு மண்டபம் இன்று (10) முன்னாள் வடமாகாண சபை உறுப்பி றிப்கான் பதியுதீன் அவர்களினால் மக்கள் பாவனைக்கு இன்று கையளித்தார்

இந்த பொதுநோக்கு மண்டபமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்ட நிதியாகும்.

மேலும் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரபீக் சேர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு ஐயா )மன்னார் பிரதேசசபை தவிசாளர் முஜாஹிர் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்ட பணிப்பாளர் முனவ்வர். மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனர்.