21 வது நாளாக தொடரும் மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க குருணாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர் அசார்தீன் மொய்னுதீன் அவர்களினால் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மறிச்சுக்கட்டி மக்களின் இந்த சாத்வீக போராட்டம் தொடர்பில் குருணாகல் மாவட்ட பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கு தெளிவு படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதாகவும் தெரிவித்தனர்.

இப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மௌஜூத், களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசீப் மரைக்கார்  ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.17952779_436860849984234_32279466703636247_n 18010647_436860929984226_4425063090355815200_n