Breaking
Sat. Apr 20th, 2024

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாசா,
இலங்கையில் சுமாா் 15-20 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்து, பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும் கஸ்டப்படுகின்றனா். ஆகவே வீடமைப்பு அமைச்சுக்கு இந்த வீட்டுப் பிரச்சினையை தீா்ப்பதற்கு பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் தன்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள்.
.
எனது தந்தை மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவா்கள் இந்த நாட்டில் 10 இலட்சம், 15 இலட்சம் திட்டம் என நாடுபூராவும் வீடுகள் அமைத்துக் கொடுத்தாா். அது மட்டுமல்லாமல் கிராமோதயம், செவன வீடமைப்புத் திட்டம், கம் உதாவ போன்ற வீடமைப்புக் கிராமங்களை உருவாக்கினாா். அத்துடன் 2000 ஆம் ஆண்டளவில் யாவருக்கும் புகழிடம் என்ற இலக்கை நோக்கிச் சென்றாா். ஆனால் அவா் மறைந்த பின் அந்த இலக்கை அதன் பின் வந்த வீடமைப்பு அமைச்சா்களால் அடைய முடியவில்லை.

ஆனால் தற்பொழுது நகரங்கள், கிராமங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் பொறுப்பினை தன்னிடம் முன்னெடுக்குமாறு பிரதமரும், ஜனாதிபதியும் உபதேசித்துள்ளனா்.

100 நாள் வேலைத்திட்டத்தில் நான் வீடமைப்பு அமைச்சினை பாரமெடுத்து கடந்த 6 மாதகாலத்திற்குள் 35ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அடுத்த டிசம்பருக்குள் அவைகள் சம்புரணப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும். சகலருக்கும் செவன என்ற திட்டத்தின் கீழ் மறைந்த ஜனாதிபதியின் வீடமைப்புத்திட்டங்கள் என்னால் முன்னெடுகக்ப்படும்.

எனது அமைச்சின் அதிகாரிகள் என்னோடு ஒத்துழைத்து மக்களது வீட்டுப்பிரச்சினையை உதவல் வேண்டும். இந்த அமைச்சில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம், மக்களை அழக்களித்தல் போன்ற செயல்களுக்கு ஒருபோதும். இடம் அளிக்கப்பட மாட்டாது.

கடந்த 100 நாள் அரசில் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கட்சியினைச் சோ்ந்த பிரதியமைச்சா் அமீா் அலியுடன் இணைந்து அமைச்சின் வேலைத்திட்டங்களை எவ்வித தடங்களுமின்றி முன்னெடுத்தேன். அதே போன்று ஸ்ரீ.ல.சு.கட்சியின் இந்திக்கா பண்டார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தேசிய அரசியல் அரசியல், கட்சி,நிறம், மதம், இனம், பாகுபாடு இன்றி சகல இன மக்களுக்கும் ஒரே சமமான முறையில் எனது அமைச்சின் பொறுப்புக்களை முன்னெடுப்பேன்.

அத்துடன் வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய ஒவ்வொரு பிரதேச, மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவையை ஆரம்பிக்கப்படும். அத்துடன் ஒக்டோபா் 5ஆம் திகதி நடைபெற உள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிலைப்படுத்தி பல்வேறு வீடமைப்பு வேலைத்திட்ங்கள் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *