Breaking
Sat. Apr 20th, 2024
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார்.
அங்கு அவர் தெரிவித்ததாவது;
2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் நீர் கட்டணத்திற்கு 2014 ஆம் ஆண்டு 44 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 24 மில்லியனாக அமைந்துள்ளது. 19 மில்லியன் ரூபா மீதப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் மின் கட்டணம் 2014 ஆம் ஆண்டு 227 மில்லியன். 2015 ஆம் ஆண்டு 91 மில்லியனாகக் காணப்படுகின்றது. 136 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி கட்டணங்கள் 2014 ஆம் ஆண்டு 69 மில்லியனாகவும் 2015 ஆம் ஆண்டு 45 மில்லியனாகவும் குறைக்கப்பட்டு 24 மில்லியன் ரூபா மீதப்படுத்தப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு இதர செலவு 732 மில்லியன்களாகும். தற்போது அதன் பெறுமதி 22 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. 710 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. கட்டட மேற்பார்வை செலவு 35 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்திற்கு 1476 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு ஐந்து கட்டிடங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு மீளவழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதியின் போக்குவரத்திற்காக 553 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் 2015 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 223 ஆகக் குறைக்கப்பட்டது. அதாவது 330 வாகனங்களை குறைவாகப் பயன்படுத்தியுள்ளோம். ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்திற்காக 154 வாகனங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 116 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 38 வாகனங்கள் குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் வாடகைக்கு 103 வாகனங்கள் பெறப்பட்டிருந்த போதிலும், 2015 ஆம் ஆண்டு அவ்வாறு எவ்வித வாகனங்களையும் நாம் பெற்றுக்கொள்ளவில்லை. 103 வாகனங்களுக்கான செலவுகளை நாம் முற்றாகக் குறைத்துள்ளோம். அதேபோன்று, 471 வாகனங்கள் கைவிடப்பட்டிருந்தன. அவருடைய பாவனைக்காக 333 வாகனங்களை வைத்திருந்தார் என விளக்கமளித்தார் பிரதமர்.
1449222208_Presidents-Final

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *