Breaking
Sat. Apr 20th, 2024

– எஸ்.ஜே.பிரசாத் –

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பதக்­கங்கள் வென்­றெ­டுக்கும் இலங்கை வீர, வீராங்­க­னை­க­ளுக்கு பணப்­ப­ரிசு வழங்­கப்­படும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயாசிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார்.

தங்கப் பதக்­கத்­திற்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளிப் பதக்­கத்­திற்கு 3 இலட்சம் ரூபாவும் வெண்­கலப் பதக்­கத்­துக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்­கப்­படும் என அவர் குறிப்­பிட்டார்.

12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திக­தி­வரை இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தில் நடை­பெ­று­கி­றது.

இந்த விளை­யாட்டுப் போட்­டியில் கலந்­து­கொள்ளும் வீர, வீராங்­க­னைகள் அனை­வரும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவின் தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டனர்.

இதில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இலங்கை சார்­பாக 23 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் 500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், வீர, வீராங்­க­னைகள் அனை­வரும் இணைந்து தெற்­கா­சியப் போட்­டி­களில் இலங்­கைக்கு வெற்­றி­யுடன் புக­ழீட்டித் தர­வேண்டும். அதை மட்­டுமே நாம் உங்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கிறோம்’’ என்றார்.

பத்து வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்­கான பயிற்­று­நர்­களை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வர­வ­ழைத்­துள்ளோம்.

தெற்­கா­சியப் போட்­டி­க­ளுக்கு தயா­ரா­வ­தற்கு எங்­க­ளுக்கு 4 மாத காலம்தான் இருந்­தது. இந்தக் குறு­கிய காலத்­திற்குள் எங்­களால் முடிந்த அனைத்­தையும் செய்­து­விட்டோம்.

வீர, வீராங்­க­னை­க­ளுக்கு என்­னென்ன தேவையோ அவை அனைத்­தையும் நாம் வழங்­கி­யுள்ளோம்.

இதற்கு பிர­தி­யு­ப­கா­ர­மாக உங்­க­ளி­ட­மி­ருந்து நாம் எதிர்­பார்ப்­பது பதக்­கங்­க­ளைத்தான்.

அனை­வரும் ஒன்­றி­ணைந்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கைக்கு வெற்­றியையும் புகழையும் ஈட்டிக்கொடுக்க வேண்டும்’’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *