Breaking
Thu. Apr 25th, 2024

(எம்.ஏ.றமீஸ்)
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரத்தினைக்குறிவைத்து எம்மை ஏழைகளாகவும் கோழைகளாகவும் அடிமைகளாகவும்மாற்றுவதற்கு இனவாதக் குழுவொன்று முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றது. இந்நாசகாரச் சக்திகளின் செயற்பாட்டினை அரசும் அரசின் பாதுகாப்புப்பிரிவினரும் தமக்கான கடமைகளை உரிய முறையில் செய்திருந்தால்முஸ்லிம்கள் மீதான பிரச்சினைகள் இந்நாட்டில் இந்தளவு வலுப்பெற்றிருக்காதுஎன வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள 380 வது சதோச விற்பனை நிலையத்திறப்பு விழா நேற்று(11) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காரிய வளக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் எம்.அப்துல் மஜீத் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்இ பெரும்பான்மைச் சமூகம் எமது முஸ்லிம் சமூகத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்துவந்த வரலாறுகள் இருக்கின்றது. இந்த வரலாற்றினை உடைப்பதற்கு சிலஇனவாதக் குழுக்கள் நாசகார விசத்தினை கையிலெடுத்துச் செயற்படுகின்றன. இக்குழுக்களின் இச்செயற்பாடுகளை அரசும் அரசின் பாதுகாப்புப் பிரிவினரும்பார்த்துக் கொண்டிராமல் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் எமது முஸ்லிம்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான பாரிய பிரச்சினைகள்எழுந்திருக்காது.

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிறுபான்மைச் சமூகங்கள்பாரிய தியாகத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டன. இதன் விளைவினால்தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கம் எமது சிறுபான்மைச் சமூகத்தினை பாதுகாக்கும்வகையில் செயற்பட வேண்டும். எமக்கான பிரச்சினைகளை இந்தஅரசாங்கத்திடம் உரிய முறையில் ஒப்புவித்திருக்கின்றோம். அதற்கமைவாகஎமது கௌரவம்இ மரியாதை போன்றவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்தநாட்டின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் எமது பிரச்சினைகள் சரிசெய்யப்பட வேண்டும் என கோரியிருக்கின்றோம்.
இந்த நாட்டில் எமது சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் சதிகளுக்குஎதிராக நான் துணிந்து உயிரைக்கூட துச்சமென நினைத்து அஞ்சாது நியாயத்திற்காக குரல் கொடுப்பதால் சில தரப்பினர் எம்மை இனவாதிகள் என்றும்மதவாதிகள் என்றும் இந்த நாட்டுக்கு ஆகாதவன் என்றும் பேசுகின்றார்கள்.நாமும் சில அரசியல் கட்சித் தலைமைகள் போல் பேசாது மௌனத்திருந்தால்நல்லவர்கள் என்று சிலர் சொல்லியிருப்பார்கள். அவ்வாறு பச்சோந்திகள் போல்நடித்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

கட்சியினைக் காப்பாற்றுங்கள் இல்லையென்றால் மறைந்த பெருந்தலைவர்மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் ஆத்மா சாந்தியடையாது என தேர்தற்காலங்களில் மட்டும் ஊர் ஊராய் வந்து கட்சிக் கீதங்களையும் மறைந்ததலைவரின் புகைப்படங்களையும் வைத்துக் கொண்டு அரசியல் கடந்த ஒருதசாப்தத்திற்கு மேலாக எமது மக்களை பகடைக் காய்களாக வைத்து அவர்கள்அரசியல் செய்வது போல் எம்மால் அரசியல் செய்ய முடியாது. அதற்கானதேவையும் எமக்குக் கிடையாது. எமது சமூகம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவதையிட்டு நான் மிகுந்த வேதனை அடைகின்றேன். எமது மக்களைஏமாற்றும் கட்சிக்கு ஒத்ததாக சில உலமாக்களும் ஒத்திசைவது குறித்து மனம்வருந்துகின்றேன்.

சுற்றுலாத் துறையின் கேந்திரமாக உள்ள பொத்துவில் பிரதேசத்தில் இளைஞர்யுவதிகளின் நன்மை கருதி உடனடியாக முதற்கட்டமாக சுமார் 100 இளைஞர்யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் வகையில் சுற்றுலாத்துறைசார்ந்த கைத்தொழில் முயற்சிக்கென 100 இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் 100 இலட்சம்பணத்தொகையினை வழங்கவுள்ளோம். இந்த 100 இளைஞர் யுவதிகளும்சுற்றுலாத்துறை கூட்டுறவு இயக்கமாக செயற்படுவதற்கும் அவர்களுக்கானபயிற்சிஇ தொழில்நுட்ப வசதிஇ சந்தை வசதிஇ பண உதவி போன்றவற்றை வழங்கதயாராக உள்ளோம்.

இதேவேளை பொத்துவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் உள்ள 50 குடும்பத்தவர்களுக்கு வீடமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்கஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கமைவாக உண்மையானஏழைகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு வீடமைப்பு வசதிகள் மற்றும்அதனோடிணைந்த அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கானஏற்பாடுகளைச் செய்யவுள்ளோம்.

இதுதவிர பொத்துவில் பிரதேசத்தின் மத்திய வீதியினை நிர்மாணிப்பதற்கு சுமார்4 கோடி ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதற்கும் மேலாகஇப்பிரதேச மக்கள் கோரியதற்கமைவாக இவ்வீதிக்கான வடிகான்களைஅமைப்பதற்கும் பணத்தினை ஒதுக்கீடு செய்யவுள்ளோம். பொத்துவில் பிரதேசமக்கள் நீண்ட காலமாக வாக்களித்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இவர்களின்ஆதங்கம் நியாயமானது அவர்களின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும்என்பதில் நாம் குறியாக உள்ளோம். அற்கமைவாக இப்பிரதேச மக்களின்தேவைகளை பட்டியலிட்டு அத்தேவைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கைஎடுக்கவுள்ளோம்.
பொத்துவில் பிரதேசத்தில் பேசு பொருளாக மாறியிருக்கின்ற தனியான கல்விவலயம் தொடர்பாக நாம் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டோம். இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் முதல் மாகாணக் கல்வி அமைச்சர் வரைதொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தினையும் நாம்மேற்கொண்டோம். சிலர் அதனையும் அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபடுவதைஇப்பிரதேச மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக வாக்களித்து வரும் கட்சிதான் தற்போது மகாண சபையில்ஆட்சியினைச் செய்து கொண்டிருக்கின்றது. இக்கட்சிக்காரர்கள் நினைத்தால்வெறும் ஐந்து நிமிடத்தில் இவ்விடயத்தில் வெற்றி காண முடியும். ஆனால்அவர்கள் அதனையும் அரசியலாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பொத்துவில் பிரதேச மக்களினதும் அம்பாறை மாவட்ட மக்களினதும் நன்மைகருதி இம்மாவட்டத்தில் உள்ள காணிஇ நீர்ப்பாசம் உள்ளிட்ட பல்துறைவிடயங்களில் நாம் சதா கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்கேற்றால்போல்துறைசார்ந்த தரப்பினரை நாம் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றோம். ஹெடஓய நீர்ப்பாசனத் திட்டத்தினை விருத்தி செய்து அம்பாறைமாவட்ட கரையோரப் பிரதேசங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்ததாக தனியானநீர்ப்பாசனத்திற்கான மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தினை வழங்குமாறுபாராளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட இடங்களிலும் நாம் கோரிக்கைவிடுத்திருக்கின்றோம். இவ்விடயம் சாத்தியமாகும் வகையில் அம்பாறைமாவட்டம் விவசாயத்தில் மேலும் விருத்தி பெறுவதோடு இங்குள்ள மக்கள்பாரிய நன்மைகளையும் பெற்றுக் கொள்வர் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *