Breaking
Fri. Apr 19th, 2024

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களை
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினர் நவவி , தென்கிழக்கு பல்கலைகழக முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் குழுவினர் திருகோணமலை ,மன்னார், புத்தளம் ,அம்பாறை மாவட்டங்களில் வைத்தியசாலைகள் அபிவிருத்திகள் தொடர்பான உயர்மட்ட சாதிப்பு நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலார், Mr. Janaka Sugathadasa சுகாதார அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களுக்கான மேலதிக செயலாளர் சந்திர குப்தா, அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் Mr.சுனில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அத்தபத்து ஆகிய உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர் .
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் ,தீர்வுகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலின் அடிப்படையிலும் , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் கிண்ணியா மூதூர் , தோப்பூர், புல்மோட்டை, குச்சவெளி வைத்தியசாலைகளின் தேவை அறிக்கைகளையும் கையளித்தார்.

கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வு சம்பந்தமாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வழங்கிய உருதிமொழிகுறித்தும் இங்கு அப்துல்லா மஹ்ரூப் அமைச்சரிடத்தில் குறிப்பிட்டு வலியுறுத்தியதோடு, கிண்ணியா வைத்திசாலை கிழக்குமாகானத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகம் , அதிகம் OPD , பல்மருத்துவம் , மகப்பேறு , சத்திரசிகிச்சைகளை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் , குறைவான வசதிகளுடன் வழங்கிவருவதையும், கிண்ணியா மட்டுமல்லாமல் சீனக்குடா ,வெள்ளைமணல் , தம்பலகமம் , முள்ளிபோதனை, வான்-எல உட்பட ஒன்றரை இலட்ச்சத்துக்கும் அதிகமான மக்கள் சேவை பெருகின்றமையையும் இங்கு விரிவாக விளக்கியதோடு வைத்திசாலை வைத்திய அதிகாரி , வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் , சுகாதார வைத்திய அதிகாரிகள், ஆலோசனையில் தயரிக்கபட்ட வைத்தியசாலை தேவைகள் , அபிவிருத்திகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
பின்வரும் விடயங்கள் விரைவாக செயட்படுத்தபடுவதட்கு இணக்கம் காணப்பட்டது.

1. கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் தரமுயர்வுக்கு வேண்டிய அவசிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதோடு,
கிண்ணியா வைத்தியசாலை மத்திய அரசினுள் உள்வாங்குவததட்கு கிழக்குமாகான சபையின் ஒப்புதல் தேவைபடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது குறித்து கவனமெடுப்பதாகவும் தெரிவித்தார்.

2. பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரிடத்தில் கையளித்த கிண்ணியா வைத்தியசாலைக்கான நவீன மருத்துவ வசதிகளுடன் 6 மாடிகட்டிட தொகுதியை அமைபிட்கும் , வைத்தியசாலைநிர்வாக கட்டிடம் அமைபதட்குமாக 2200 Million (220 கோடி) ஜப்பானிய நிதியின் JICA திட்டத்தில் நடவடிக்கைக்குக் அமைச்சர் ராஜித அவர்கள் சுகாதார அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களுக்கான மேலதிக செயலாளர் சந்திர குப்தா அவர்கலுக்கு பணிப்புரைவிடுத்தார்.
3. இன்னொரு அனர்த்தத்திற்கு சமாளிக்கக்கூடிய வகையில் வைத்தியசாலை தேவைகளை குறிப்பிட்ட காலப்குதிக்குள் நிறைவேற்றிதருவதாக அமைச்சர் ராஜித எமது குழுவினருக்கு உறுதியளித்தார்.

4. தோப்பூர் , குச்சவெளி, புல்மோட்டை , பதவி சிறிபுர வைத்தியசாலைகளின் தேவைகளையும் , வைத்தியர் மற்றும் ஆளணிபற்றாகுரைகளையும் எதிர்வரும் மாதங்களில் வழங்கவிருக்கின்ற வைத்தியர், தாதியர் நியமனத்தில் முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிகப்பட்டது.

5. கிண்ணியா , மூதூர் வைத்தியசாலைகளின் வடிகானமைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு மதிப்பீட்டை (estimet) மேட்கொண்டு , சுகாதார அமைச்சுக்கு அனுப்புமாறு மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் அனுப்புவதற்கு பணித்தார்..

மேற்குறித்த வேலைத்திட்டங்கள் அமுல்படுதுவதினை முன்னேற்றத்தினை தொடர்ச்சியாக அவதானித்து அது தொடர்பில் அர்விக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித அவர்கள் , அமைச்சர் ரிசாத் , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கேடுகொண்டார்.
அத்துடன் டெங்கு காலபகுதியில் மருந்து காப்பதற்கான வைத்தியசாலைக்கு துரிதமாக வழங்கிய 2 கொல்கலன்களுக்கு அமைச்சர் ரிசாத் , பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் அமைச்சர் ராஜித சேனரத்ன நன்றியையும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *