Breaking
Fri. Apr 26th, 2024

 

கிண்ணியா முன்னாள் நகரபிதாவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான டாக்டர். ஹில்மி மஹ்ருப் விடுத்துள்ள அறிக்கையில் போலிப்பிரச்சாரங்கள் கட்டவில்த்து மக்களை குழப்ப வேண்டாமென தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தான் சமூக நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தில் கால்ப்பதித்து திருகோணமலை மாவட்ட மக்களின் நலனில் அக்கரை கொண்டவனாக பல்வேறு தியாகங்களுடனும் அர்ப்பனிப்புடனும் சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

திருகோணமலை மாவட்டதில் எழுச்சி பெற்று வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடாக எமக்கு இளைஞர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைப்பதை அறிந்தவர்கள் போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். குழப்பத்தை உண்டு பன்னும் நோக்கில் போலி முகநூலகளினனூடாக மக்கள் மத்தியில் ஹில்மி மஹ்ருப் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

சதிகாரர்களுக்கெல்லாம் கதிகாரன் அல்லாஹ்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பின்னர் முஸ்லிம்களனின் உரிமைக்காகவும், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய தலைமையாகவும் இன்று சமூகத்தினால் ஏற்றுக்கொள்ப்பட்ட தலைமையாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விளங்குகின்றார். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் அரசியல் பயணத்தில் இருப்பதை இட்டு பெருமிதம் அடைகின்றேன். இனவாதிகளுடனும் சதிகாரர்களுடனும் நெஞ்ஞை நிமிர்த்தி பேசும் தைரியமிக்க தலைமையினூன அரசியல் பயணம் இது என்பதை மக்களுக்கு தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல் காலம் நெருங்கவதால் சிலர் குழப்பி விட்டு குளிர் காயலாம் என்று பகல்க்கனவு காண்கின்றனர். எனது அரசியல் பயணம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடனுமே என்பதையும் நான் எந்தக் கட்சியிலும் இணையவும் இல்லை இணையவும் மாட்டேன் என்பதை தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

திருமண வைபவமொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேடும் பொய்யான செய்திகளை வெளியிடும் போலி முகநூல் வீரர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். என்றும் ஹில்மி மஹ்ருப் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *