Breaking
Sat. Apr 20th, 2024
 SLIIT இனால் நடாத்தப்பட்ட “CODEFEST 2014” தகவல் தொழிநுட்ப போட்டிகளின் இறுதிச் சுற்றில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசலை அணி, நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்று ரூபா 50,000 பணப்பரிசையும் வென்றுள்ளது.
இன்று (24.10.2014) காலை 8 மணிக்கு, மாலபேயில் அமைந்துள்ள SLIIT வளாகத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் கல்முனை ஸாஹிராவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அணியில் ஹசீப் மொஹமட், KMM.அஸ்ஸாம் ஹுசைன், MJM.முதஸ்ஸீர் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, கொழும்பு தேஸ்டன் கல்லூரி, பிலியந்தல மத்திய கல்லூரி, கல்கிசை புனித தோமஸ் கல்லூரி, அளவ்வ ஸ்ரீ ராகுல வித்தியாலயம், பண்டாரவல மத்திய மகா வித்தியாலயம், மாத்தறை தெலிச்சாவல மத்திய கல்லூரி, ஆகிய 7 பாடசாலைகள் கலந்து கொண்டன.
இதனை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான குறுந்தகவல் வாக்கெடுப்பில் எமது கல்முனை ஸாஹிரா அணி 1325 வாக்குகளைப் பெற்று 1ஆம் இடத்தைப் பெற்று அதற்கான சான்றிதழையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு 90 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றிய “online quiz” போட்டியொன்றும் இதன் போது இடம்பெற்றது.
இப்போட்டியில் கல்முனை ஸாஹிரா மாணவர்கள், நாடளாவிய ரீதியில் 5 ஆம் இடத்தைப் பெற்றதோடு, சிறப்புத் தேர்ச்சிச் (Merit) சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். இப்போட்டிக்காக, கல்முனை ஸாஹிராயை பிரதிநிதித்துவப்படுத்தி SHM.சஜாத், ACM.டீன், A.ரஷா மொஹமட் ஆகியோரைக் கொண்ட அணி பங்குபற்றியது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *