Breaking
Thu. Apr 25th, 2024

 

இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

புலமைச் சொத்துக்கள் ஆலோசனை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்.
7 – 11 வரையிலான அங்கத்தவர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்ட விற்பன்னரும், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவருமான கலாநிதி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகத்தினுடாக இந்த புதிய ஆணைக்குழு தமது வழிகாட்டல் பொறிமுறையை மேற்கொள்ளும். புதிப்புரிமை,  (Copyright) வணிகச் சின்னம், (Trademark) படைப்புரிமம் (Patent) புவிசார் குறியீடு (Geographical Indication) வணிக இரகசியம் (Trade Secret) ஆகியவை தொடர்பில் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்தி புலமைசார் சொத்துக்களை விருத்தி செய்வது தொடர்பில அமைச்சருக்கு நேரடி ஆலோசனைகளை வழங்கும்.

அமைச்சர் இங்கு உரையாற்றியதாவது,

மெட்றிட் நெறிமுறையில் விரைவில் இலங்கையும் ஈடுபாடு காட்டும் வகையில் இந்த ஆணைக்குழு துரித கவனம் செலுத்தவுள்ளது. இதன் மூலம் புலமைசார் சொத்துக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பங்களிப்புக்களை ஆணைக்குழு வழங்கும் என நம்புகின்றேன். அறிவுசார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவேண்டுமென்ற தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில்  புலமைசார் சொத்துக்களை ஏற்றுமதி செய்வதில் பாரியமட்டத்தில் பங்களிப்பை இந்த ஆணைக்குழு வழங்கும் என நான் திடமாக நம்புகின்றேன். அந்தவகையில் தமது செயற்பாடுகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மெட்றிட் நெறிமுறையின் கீழ் இலங்கையை உள்ளீர்ப்புச் செய்யும் நடவடிக்கைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 100மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அமைச்சர், தேசிய புலமைசார் சொத்து அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு சர்வதேச ரீதியிலான இந்த உள்ளீர்ப்பு நடவடிக்கைக்கு அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்தார்.

2003ம் ஆண்டு புலமைசார் சொத்து, சட்டவிதிகளின் 36வது இலக்க 162வது விதிகளின் கீழ் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் 3வருடங்கள் வரை தமது பதவிக்காலத்தை கொண்டிருப்பர்.  ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கலாநிதி சுவாமிநாதன் நீண்டகாலமாக புலமைசார் சொத்துக்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்து இந்த துறையில் பரிச்யம் கொண்டவர். வர்த்தக கப்பல்துறை அமைச்சராக ஏ.ஆர். மன்சூர் பதவி வகித்த  காலத்தில், ஒரு கட்டத்தில் 1989 – 1990ஆம் ஆண்டு வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அவர் இந்த ஆணைக்குழுவின் தலைவராகவும்  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *