Breaking
Fri. Apr 19th, 2024

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம் காட்டிவருகின்றோம் எனவும், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹேட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் பிறமெல் கிலாஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், இலங்கை பீங்கான் மற்றும் கண்ணாடி ரக கவுன்சிலின் தலைவருமான சஞ்ஜே திவாரி மிடாயா செரமிக் கம்பனி லிமிடட்டின் தலைவரும், கவுன்சலின் முன்னாள் தலைவருமான எஸ். எல். சி.ஜீ.சி தயாசிறி வர்ணகுலசூரிய ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

அமைச்சர் உரையாற்றியபோது கூறியதாவது,

 

இலங்கையின் களியும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களும் உயர்ந்த தரம் வாய்ந்தவை.

 

நமது பீங்கான் உற்பத்திப் பொருட்களும், கண்ணாடி பொருட்களும் இலகுவில் சேதமடையாதவை.

2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் இலங்கையின் மொத்த பீங்கான் மற்றும் கண்ணாடி ஏற்றுமதிப் பொருட்களின் பெறுமதியானது 61 மில்லியன் டொலரிலிருந்து 50மில்லியனாக குறைவடைந்துள்ளது.

 

இது தற்காலிக பின்னடைவாக இருந்தபோதும் தற்போது இத்துறைகளின் வளர்ச்சி வீதம் படிப்படியான நேரான அதிகரிப்பைக் காட்டி முன்னேற்றம் அடைந்துவருகின்றது.  பீங்கான் உற்பத்தித்துறையில் இலங்கைக்கு நீண்டகால வரலாறு உண்டு. எமது உற்பத்திப் பொருட்கள் தரமாகவும், இலகுவில் சேதமடையாதததாகவும் இருப்பதனாலேயே உலகச் சந்தையில் இப்பொருட்களுக்கான போட்டித் தன்மை அதிகரித்து வருகின்றது. இந்தப் போட்டித்தன்மையை அடுத்து எங்களது தயரிப்புக்களுக்கான உற்பத்திச் செலவை குறைத்து உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிதன் அவசியம்   ஏற்பட்டுள்ளது.

 

2011ம் ஆண்டு இந்த வகையானபொருட்களை தயாரித்துவரும் தொழிற்சாலைகளின் எரிபொருளுக்கான செலவை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை நாம் சமர்ப்பித்த போதும், அது வெற்றியளிக்கவில்லை. அதற்கான தீர்வை பெறுவதற்காக இன்னும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பெற்றோலிய வளத்துறை அமைச்சுடனும் எரிபொருள் வியாபார வர்த்தகரிடமும் இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான  எரிபொருட்களை குறைந்த விலையில்  வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை எமது அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் களியையும், ஏனைய கனியவளப் பொருட்களையும் கண்டு பிடிப்பதற்கான ஆய்வினை மேல்மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் மேற்கொண்டு நாங்கள் வெற்றி கண்டு வருகின்றோம்.

 

செங்களி தொழி;ற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம். நமது நாட்டின் செங்களியானது  தரமானதும், கூரை ஓடுகளை தயாரிப்பதற்கான சிறந்த கேள்விகளைக் கொண்டதுமாகும்.

 

அடுத்தாண்டு முதல் அபெஸ்டஸ் இறக்குமதியை தடைசெய்யும் திட்டம் இருப்பதால்  இலங்கையில் களிக்கான கேள்வி இன்னும் அதிகரித்து அதன் மூலம்  மேற்கொள்ளப்படும் தயாரிப்பு பொருட்களின் கிராக்கியும் உயரும் வாய்ப்புண்டு.

 

அத்துடன் இலங்கை தர கட்டளைகள் சான்றிதழ் நிகழ்ச்சி திட்டத்திற்கும் நாங்கள் உதவியளித்து உள்ளுர் செங்கல் உற்பத்தியின் நற்பெயரை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய பொறியில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (Nநுசுனு) ஒத்துழைப்புடன் இலங்கையில் முதன்முதலாக கூரை ஓடுகளை உலர்த்தும் நிலையத்தை தங்கொட்டுவையில் உருவாக்கியுள்ளோம். அத்துடன் செங்களி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 30 இலங்கையரை பெல்ஜியம், சீன நாடுகளில் தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்கு அனுப்பியிருக்கின்றோம்.

 

உலகிலே எங்குமில்லாதவாறு இலங்கையின் பீங்கான் மற்றம் கண்ணாடிப்பொருட்கள் சர்வதேச சந்தையில் தரம்வாய்ந்ததாக கருதப்படுகி;னறது. அமெரிக்காவின் கூட்டாட்சி அபிவிருத்தி மன்றத்தின் தரச்சான்றிதழையும் நாம் பெற்றுயிருப்பதோடு சர்வதேச தரக்கட்டளைகள் சான்றிதழும் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் நுண் அலை, அவண், சலவை இயந்திரம் ஆகியவற்றின் வெப்பச்சக்தியை ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் அதற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையிலும் எமது நாட்டின் உற்பத்தி பொருட்கள் அமைந்துள்ளமை சிறப்பானதென்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *