Breaking
Sat. Apr 20th, 2024

புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று 27.09.2017 இடம்பெற்ற போது, மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சரான ரிஷாட் பதியுதீன்   பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அமைச்சர் உரையாற்றியதாவது,

புதிய தேசிய கூட்டுறவுத்துறையின் உருவாக்கத்திற்கு உதவிவரும் மாகாண கூட்டுறவு அமைச்சர்களுக்கு இந்த நிகழ்விலே நான் நன்றி தெரிவிக்கின்றேன். விரைவில் வெளியிடப்படவுள்ள தேசிய கூட்டுறவுக்கொள்கையில் பல்வேறு நவீன விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுவுடன் புதிய உள்கட்டமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் விருப்புக்களும் உள்ளடங்;கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கையானது விவசாயத்துறையுடன் தொடர்புப்பட்ட பல உபதுறைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமன்றி, தகவல் தொழில்நுட்பத்தில் புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்துகின்றது. கிராமப் பிரதேசங்களில் வாழும் நுகர்வோருக்கு இந்தக் கொள்கையின் மூலம் பயன்கிடைக்கும் என நம்புகின்றோம். என்று தெரிவித்த அமைச்சர், இந்த தேசியக் கொள்கையை பூரணப்படுத்துவதற்கு உதவிவரும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

ஊடகப்பிரிவு

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *