மக்கள் காங்கிரஸின் மகளிர்பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்

October 10th, 2017, by

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார்.

வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து குடும்பச்சுமைகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பல்வேறு மன உளைச்சல்களுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டே இவ்வாறான செயலமர்வு நடாத்தப்பட்டு வருவதாகவும்,  அவர்களுக்கு மனோ ரீதியான மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் வாழ்க்கையை சீராக கொண்டு போவதற்கு உதவுவதே இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமாதான நீதவான் நசீகாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக சமூக சேவையாளரும், பொறியியலாளருமான சுபியான் ஏ.வஹாப் மற்றும் கொலஜ் ஒப் எல்சைன்ஸ் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் முனாசிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

More from my site

Comments

comments