இலங்கைக் கடலில் அத்துமீறும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது என அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு (NDTV) அவர் அளித்த பேட்டியில், “இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது. இதில் ஒன்றும் புதிது இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி இலங்கைப் பயணம் மேற்கொண்டு இரண்டு நாள்கள் ஆன நிலையில், இலங்கை பிரதமர் ரணில் மீண்டும் இத்தகைய கருத்தைப் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, மோடியின் பயணம் தொடங்குவதற்கு முன்பு தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், இதே கருத்தைக் கூறி, அத்துமீறும் தமிழக மீனவர்களை சுடுவதில் தவறில்லை என்று அவர் குறிப்பிட்டது நினைகூரத்தக்கது.
-தி இந்து-