Breaking
Wed. Jun 18th, 2025

புனித நகரமான மக்காவில் உள்ள ஜாரனா மஸ்ஜிதில் இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய உடையான ‘அபயா’ வை அணிந்து கொண்டு வலம் வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மஸ்ஜிதிற்கு வந்திருக்கும் பெண்களில் ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு செல்வதாகவும் விசித்திரமாக நடந்து கொள்வதாகவும் மஸ்ஜிதில் உள்ள சிலர் பொலிஸில் புகாரளித்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்காணித்த பொலிஸார் அவர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்றதைக் கவனித்தனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஹபாயாவை அணிந்துக் கொண்டிருப்பதைக் கண்ட பொலிஸார் பெண் வேடத்தில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

அவர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post