Breaking
Fri. Jun 20th, 2025

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.

வருகை தரவுள்ள இராஜாங்க அமைச்சர் நாட்டின் ஜனாதிபதி , பிரதமர், வௌிவிவகார அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

அத்துடன் களனி விகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய நிறுவனத்தில் ஒரு விரிவுரையையும் ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து மறுநாளான 03 ஆம் திகதி பிற்பகல் இலங்கையிலிருந்து அவர் புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post