Breaking
Sun. Jun 15th, 2025

அஸ்ரப் ஏ சமத்

கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார்.

ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லியன் ருபாவை சேமிக்கப்பட்டுள்ளது. என வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

இன்று செத்சிரிபாயவில் உள்ள வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகமாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தாவது
அரச பொறியற் கூட்டுத்தாபனத்தில் 54 பேர் முன்னாள் அமைச்சரின் கட்சி ரீதியாக இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சம்பளம் வாகனங்களும் இந்த கூட்டுத்தபானத்தில் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் 30 வாகனங்கள் தனியார் கம்பனியில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. ஒரு வாகனம் மாதாந்தம் 30ஆயிரம் ருபாவை செலுத்தியுள்ளனர். அவ் வாகனங்களுக்கு மாதம் ஒன்று 22 இலட்சம ; ருபா எரிபொருள் செலவிடப்பட்டது. மற்றும் சம்பளங்கள் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றை நாம் தேவையற்ற செலவுகளை இடை நிறுத்தி இந்த நிறுவனத்தின் அநாவசியமான செலவினங்களை தடுத்து நிறுத்தினேன்.

அத்துடன் இக் கூட்டுத்தபானத்தில் 2000 பேர் மட்டுமே அங்கு கடமையாற்றக் கூடிய ஆளணி இருந்தது;. ஆனால் முன்னாள் அமைச்சர் மேலதிகமான 1000பேரை அவரது கட்சி ஆதரவாளர்;;;;களை நியமித்துள்ளார். அவர்கள் 180 நாள் திட்;டத்தின் கீழ ;நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு செய்வதற்கு எவ்வித கடமைகளும் இல்லை அவர்கள் தினமும் கையெழுத்திட்டு விட்டு மாத மாதம் சம்பளம் பெறுகின்றனர்.

இதே போன்று தான் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலும் ;நடைபெற்றுள்ளது.
எனது 50ஆயிரம் வீடமைப்புத்திட்டம் நாடு முழுவதிலும் சமமாக முன்எடுக்கப்பட்டு வருகின்றது. முதலாவது வீடமைப்புத்திட்டம் மார்ச் 25ஆம் திகதி குருநாகலிலும் புத்தளத்திலும் 1500 குடும்பங்களுக்கு 1 இலட்சம் ருபா வீதம் வழங்கி வீடுகள் நிர்மானப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

இந்த நாட்டில் வீடில்லாதோருக்கு 12 இலட்சம் வீடுகள் நிர்மானிக்க வேண்டியுள்ளது. கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் மோடி அவர்களுடன் 6 முறை சந்திக்க முடிந்தது. அத் தருணத்தில் வட கிழக்கு மலையக மக்களுக்கு இந்தியா அரசாங்கம் வீடுகளை அமைப்பதனை பாராட்டி நன்றி தெரிவித்தேன்.

அத்துடன் ஏனைய மக்கள் வாழ்கின்ற ஹம்பாந்தோட்டையில் நரேந்திர மோடியின் பெயரில் வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு வேண்டுகோள் விடுத்தேன் அதனை இந்திய ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சஜித் தெரிவித்தார்.

Related Post