பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின்றி சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தன்னிச்சையாக பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துவருகிறார். எனவே, அவரிடம் இருந்து பொலிஸ் துறையை மீளப்பெறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
கிறிஸ்தவ விவகாரம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சைக் கொடுத்துவிட்டு பொலிஸ்துறையை மீளப்பெறுமாறு மீளப்பெறுமாறு கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை இன்றி சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தனது தேவைக்கேற்றவாறு பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகின்றார். இதனை பொலிஸ் மா அதிபரும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இலக்குவைத்து ஐ.தே.க. இவ்வாறு செயற்படுகின்றது. எனவே சட்டம், மற்றும் சமாதான அமைச்சுப் பதவிகளிலிருந்து உடனடியாக ஜோன் அமரதுங்கவை நீக்குமாறு கோருகின்றோம். கிறிஸ்தவ விவகாரம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சைக் கொடுத்துவிட்டு பொலிஸ்துறையை மீளப்பெறுமாறு கோருகின்றோம் என்றார்.
கேள்வி:- ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடந்தது?
பதில்:- அது அவ்வாறே இருக்கின்றது. தேவை ஏற்படின் அதனை நாமே கொண்டுவருவோம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தாலும் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் நாம் எடுத்த இந்த முயற்சியின் காரணமாக வெற்றிகளை அடைந்தோம். பல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.
கேள்வி:ஐ.தே.க.வுடன் இணைந்து பல சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் போட்டியிட உள்ள
தாக அமைச்சர் அகில விராஜ் கூறியுள் ளாரே?
பதில்:- அமைச்சர் அகிலவிராஜ் கனவு கண்டுள்ளார்.