K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பொதுவாக மக்கள் பிரதிநிதிகளை தேர்தல் காலஹ்களில் மட்டுமே சாதரண பொதுமக்களால் இலகுவாக சந்திக்க முடியும்.பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பில் சென்று குடியேறுவிடுவர்.இதன் பின்பு மக்களால் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை பல மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.(உ-ம்)வன்னியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மாகாணப் பிரதிநிதி
அமைச்சர்களில் மிகவும் வேறுபட்ட ஒருவாராக அமைச்சர் றிசாத் பதியுதீன் திகழ்கிறார்.இவரை வேண்டிய நேரம் வன்னி மக்கள் சந்திக்க முடியும் தொலைபேசி முலம் அல்லது கடிதம் முலம் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் ‘சில அமைச்சர்களையும் ,மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க முடியாமல் மக்கள் படும் கஸ்டங்களை நாம் அறிவோம்.’ எவ்வித இடைத்தரகரோ , அமைப்பாளர்களோ எவருமின்றி தனியாகச் சென்று இவரை மக்களால் இலகுவில் சந்திக்க முடிவது ஒரு நல்லாட்சியின் இலக்கணம்
ஒவ்வொரு மாதமும் அல்லது இரு வாரங்களுக்கு ஒரு தடவை கூட மக்களை நேரடியாக கிராமங்களுக்கச் சென்று சந்திப்பது பாராட்டத்தக்கது.வேலைப்பளுவிற்கு மத்தியிலும் எப்படி இது முடிகிறது.
மணக்குளம் ,பண்டாரவெளி , புதுவெளி , கூழாங்குளம் , சிறுக்குளம் , வேப்பங்குளம் , மருதமடு ,காயக்குளி ,கொக்குப்படையான் ,பிச்சைவாணிபங்குளம் ,அகத்தி முறிப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று தையல் பயிற்சி நிறுவங்களை திறந்து வைத்ததுடன் அங்குள்ள மக்களின் தேவைகள் ,அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடி தகவல்களை திரட்டிக் கொண்டார்.மீளக்குடியேறிய மக்களுக்கு பல தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டியுள்ளதை இனம் கண்டு விரைவில் அவற்றைப் பூர்த்தி செய்து தருவதாக நடவடிக்கை எடுத்தள்ளார்.
ஓவ்வொரு கிராமங்களிலுள்ள , பெண்கள்,தாய்மார்கள்,முதிய பெண்கள் ,வயோதிபர்கள் ,வாலிபர்கள் ,சிறியோர்கள்,பள்ளிவாயல்.பரிபாலன சபையினர்,சமூகசேவை சங்கப்பிரதிநிதிகள் அரச ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சரின் குழுவினரை ஆரவாரத்துடன் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றதையும் ,முசலி மக்களுக்கும் அமைச்சருக்கிடையில் இருக்கும் தொடர்பையும் நேரடியாக அறியக்கூடியதாக இருந்தது.சொல் வீரரல்ல அமைச்சர் செயல் வீரர் என்பதால் முசலி மக்கள் இவரோடு தான் என்றும் இருப்பர்.
அமைச்சருடன் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் , அமைச்சரின் செயலாளர் அலிகான் சரீப் ,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முனவ்வர் ,முசலிப்பிரதேச சபை தவிசாளர் டபிள்யு.யஹ்யா பாய்,பிரதித்தவிசாளர் பைரூஸ் போன்றோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.