உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரன்ஜித் மத்துப பண்டார அண்மையில் மன்னார் டிப்போவுக்கு விஜயம் செய்தார்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இங்கு வருகைத்தந்த அமைச்சர் தற்போதைய டிப்போவின் நிலைக் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்து கொண்டார்.
நீண்ட துார மற்றும் குறுந்துார போக்குவரத்து சேவைகள் தொடர்பில் மக்களுக்கு இலக சேவை வழங்குவதன் அவசியம் குறித்து போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளிடத்தில் எடுத்துரைத்தார்.’
மன்னார் டிப்போவின் செயற்பாடுகளை விஸ்தரிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது தொடர்பில் சாலை முகாமையாளர் சாஹிர்,வடமாகாண பிராந்திய முகாமையாளர் எம்.அஸ்கர் ஆகியோர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்.வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர் பைரூஸ் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.