அம்பதென்ன லங்கா சதொச திறப்பு நிகழ்வு!

0
933

-ஊடகப்பிரிவு-

கண்டி மாவட்டத்தின் அம்பதென்ன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று காலை (29) திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, லங்கா சதொச கிளையை திறந்து வைத்தார்.

அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here