ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனவே, நேற்று முதல் அரச வாகனத்தை சட்ட விரோதமாக வாகனங்களை வைத்திருப்போருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என்பதுடன் அவர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.