Breaking
Wed. Jun 18th, 2025

இர்ஸாத் ஜமால்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அ.இ.ம.காங்கிரஸானது தன் சேவையால் வடமாகாணத்தை வென்றதோடு, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

தேர்தலுக்கு பின்னர் நாடாலாவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடாத்தி கட்சியின் புதிய காரியாலயங்களை திறந்து வரும் அ.இ.ம.காங்கிரஸ் தற்போது அம்பாறை மாவட்டத்திலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு வி{யத்தை மேற்கொண்ட அ.இ.ம.காங்கிரஸ் குழுவினர் தற்காவலிகமான மத்திய குழு உறுப்கபினர்களை தெரிவு செய்தது.

நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல்களை கருத்தில் கொண்டு நாடாலாவிய ரீதியில் கட்சியின் மத்திய குழுக்களை இஸ்திரப்படுத்தும் செயற்திட்டம் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எம்.எஸ்.ஹமீட் அவர்களால் மிக மும்முறமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 (08) காலை 10 மணியளவில் பொத்துவிலுக்கு வருகை தந்த கட்சியின் செயலாளர் அவர்களின் தலைமையில் பொத்துவில் மத்திய குழுவிற்கான உறுப்பினர்கள் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், பொத்துவில் மத்திய குழுவின் தலைவர், அமைப்பாளராக எ.எஸ்.எம்.சலீம் ஆசிரியரும், செயலாளராக எம்.ஐ.எம்.றியாத்தும் தெரிவு செய்யப்பட்டதுடன், எம்.ஐ.எம்.சஜீத் இளைஞர் அமைப்பாளராகவும், எ.எ.இர்ஸாத் இணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். முற்றும் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.அனஸ், கணக்காய்வாளராக எ.எல்.சபூர்தீன் ஆசிரியரும், ஆலோசகர்களாக எ.எம்.எ.ஹக்கீம்; அதிபர், எ.எல்.முகம்மட் ஆசிரியரும் தெரிவு செய்யப்பட்;டனர்.

எ.பி.சதகத்துல்லா, எ.எல்.காசிம் உப தலைவர்களாகவும், கே.அப்துல் ஹலீம் உப செயலாளராகவும், எ.நசுறுதீன் உப பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். பொத்துவில் பிரதேச்திலுள்ள 20 முஸ்லிம் கிராம சேவகர் பிரிவிற்கும் தலா ஒரு மத்திய குழு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Post