ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை 9, 10, 11ம் திகதிகளில் பதுளையில் இடம்பெறுகிறது. மலையகத்தில் தமிழ்மொழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் ஊவா மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்கும் பொருட்டு இன்று 9ஆம் திகதியும் 10, 11, 12 ஆம் திகதிகளிலும் பதுளை ஹாலி எலை கல்வி வள நிலையத்தில் நேர்முகப்பரீட்சை இடம்பெறுகிறது.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்களுக்கே இவ்வாறு நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதேவேளை இம்மாகாணத்தில் 996 ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.