Breaking
Thu. Mar 20th, 2025

பசறை – வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை காணாமல் போயுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழமைப் போல் பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை மாலை வரை வீடு திரும்பாததையடுத்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Post