இங்கிலாந்து பாராளுமன்ற குழு, காசநோய் தாக்கம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொடிய காசநோய் பரவ இருக்கிறது என்றும், இன்னும் 35 ஆண்டுகளில் இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 7 கோடியே 50 லட்சம் பேர் பலியாகலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோய் தாக்கம் காரணமாக உலகின் பொருளாதாரம் ஒரு சதவீதம் அதாவது, ஐரோப்பிய நாடுகளின் ஒரு ஆண்டு உற்பத்தி அளவுக்கு பாதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
எனவே, இப்போதே இந்த காசநோய் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள்.