இத்தாலிய கிராமமொன்றில் ஒரே நாளில் 100 அங்குல (சுமார் 8 அடி) உயரத்திற்கு பனிப்பொழிவு இடம்பெற்றுள் ளது.
ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலைவிலுள்ள கப்ரகொதா கிராமத்தில் இடம்பெற்ற இந்த பனிப்பொழிவானது தனியொரு நாளில் இடம்பெற்ற அதிகளவான பனிப்பொழிவு என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
மேற்படி பனிப்பொழிவையடுத்து மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு பனிக் குவியலினூடாக சுரங்கப்பாதைகளை தோண்ட நேர்ந்துள்ளது.
இந்தப் பனிப்பொழிவு 1921 ஆம் ஆண்டு அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் சில்வர் லேக் பிராந்தியத்தில் இடம்பெற்ற 76 அங்குல பனிப் பொழிவால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது.