Breaking
Sat. Jun 21st, 2025

சீன நீர்­மூழ்கிக் கப்­பல்கள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு இலங்­கையின் புதிய அர­சாங் கம் அனு­ம­திக்­காது என்று, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

சீனா­வுக்கு இரண்டு நாள் பய­ணத்தை மேற்­கொண்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சீனப் பிர­தமர் லி கிகியாங், சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யி ஆகி­யோரை
சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

நேற்று பீஜிங்கில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த அவ­ரிடம், முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல, சீன நீர்­மூழ்­கிகள் இலங்கைத் துறை­மு­கத்தை அணுக புதிய அர­சாங்கம் அனு­ம­திக்­குமா? என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்குப் பதி­ல­ளித்த வெளி­வி­வ­கார அமைச்சர்,

 “ஜப்­பா­னியப் பிர­தமர் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த நாளில், சீன நீர்­மூழ்­கிகள் கொழும்புத் துறை­மு­கத்தை அடைய வழி­வ­குத்த சூழல் என்­ன­வென்று எனக்கு உண்­மை­யி­லேயே தெரி­யாது. ஆனால் நாம் அத்­த­கைய சம்­ப­வங்கள், எமது பத­விக்­கா­லத்தில் எந்தத் தரப்பில் இருந்தும் நிக­ழாது என்­பதை உறு­திப்­ப­டுத்­துவோம்.

புதிய அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­காரக் கொள்கை மையத்­துக்கு மீண்டும் நகர்த்­தப்­படும். அதன் மூலம் இன்னும் கூடு­த­லான நடு­நிலை நிலைப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­படும். நடு­நி­லைக்குத் திரும்­புதல் என்­பதுஇ ராஜபக் ஷவினால் சீனா­வுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நெருக்­க­மான உறவை நீர்த்துப் போகச்­செய்­வ­தல்ல.

நடு­நி­லைக்குத் திரும்­பு­வதால் சீனா­வுடன் இலங்கை கொண்­டுள்ள உற­வு­களை எந்த வகை­யிலும் பாதிக்­காது. அவர்கள் அந்த இடத்­தி­லேயே இருப்­பார்கள். உலகின் மற்ற நாடு­களைப் போலவே, சீனா­வு­ட­னான உற­வு­களைப் பலப்­ப­டுத்­தவும் நாம் முயற்­சிப்போம்” என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே, சர்­வ­தேச ரீதி­யிலும் பிராந்­தி­யத்­திலும் இலங்­கையும் சீனாவும் ஒன்­றுக்கு ஒன்று உத­வி­க­ர­மாக இருக்க வேண்டும் என்று சீன வெளி­யு­றவு அமைச்சர் வாங் யீ தெரி­வித்­துள்ளார்.

‘சர்­வ­தே­சத்­திலும் பிராந்­தி­யத்­திலும் என்ன வகை­யான மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும், எங்கள் இரண்டு நாடு­க­ளிலும் என்ன வகை­யான மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும் இரண்டு நாடு­களும் எமது பாரம்­ப­ரிய நட்­பு­றவை பேண வேண்டும் என்று இரு­த­ரப்பும் நம்­பு­கின்­றன’ என்றும் வாங் யீ தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்த மாதம் சீனா­வுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ள நிலை­யி­லேயே, மங்­கள சம­ர­வீர அங்கு சென்­றுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர், இலங்கையின் முக்கிய பொருளதார பங்காளியாக சீனா மாறியிருந்தது. தென்னிலங்கையில் துறைமுகம் ஒன்றும் விமான நிலையம் ஒன்றும் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post