அரலகன்வில, மீவத்புர பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இராணுவ வீரரான ரணதுங்ககே சுகத் குமார (வயது 28) என்பவரே காணாமல் போயுள்ளார்.
மூன்று நபர்களுடன் மாகாவலி கங்கையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராணுவ வீரரை, முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன இராணுவ வீரரை தேடும் பணியில் அரலகன்வில பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.