Breaking
Sun. Jun 15th, 2025

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

அதற்கு திகதி ஒன்றை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்.இந்தச் சந்திப்பில் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாடு மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post