ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இன்று காலை இலங்கைக்கான புதிய தூதுவர் yi xianliang வரவேற்றதுடன்.சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் கடந்தகாலங்களில் செய்த அபிவிருத்தி உற்கட்டமைப்பு உதவிகள் அனைத்துக்கும் எமது புதிய அரசாங்கம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன்,தொடர்தும் அபிவிருத்திக்கு ஒத்தழைப்புகளை வழங்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய தூதுவர் நான் உற்பட சீனா அரசாங்கம் ஆகியன புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நற்புறவுடன் செயற்பட ஆர்வமாக உள்ளதுடன்,புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவும் முதலீடு செய்யவும் சீனா முதலீட்டார்கள் முன்வருகின்றார்கள் என்றும் தூதுவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தூதுவர் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு நகர அழகாக்கல்திட்டம் (port city) நிறுத்தப்பட்டமையையிட்டு கவலையடைவதாகவம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் றிஷாத், உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு அதனை நிறுத்த வேண்டும் என்ற ஆசை இல்லை,அதற்கு எதிராக அதிகமான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாலும்.சுற்றுச்சூழல் ஆய்வுகள் முறையாகப் பின்பற்றப் படாமையினால்தான் இவ்வாறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஐனீவா மனித உரிமை வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்கழித்தமைக்கும் இலங்கை அரசாங்கம் சார்பாக அமைச்சர் சீனாவுக்கு விசேட நன்றியையும் கூரினார்.இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.