Breaking
Fri. Mar 21st, 2025
தெற்காசிய நாடுகள் சிலவற்றிற்கு அல்-கொய்தா அச்சுறுத்தல் காணப்பட்டாலும் அந்த அமைப்பினால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
தெற்காசிய பிராந்தியத்தில் தமது அமைப்பினை உருவாக்க போவதாக அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒருவர், அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் நிலையில் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கையில் உள்ளதா? ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு கூறினார்.
தெற்காசிய பிராந்திய நாடுகளில் தமது அமைப்பினை நிறுவ போவதாக அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தாலும் இந்த அமைப்பின் இலக்கு தெற்காசிய பிராந்தியத்திலுள்ள ஏனைய சில நாடுகளேயன்றி இலங்கை அல்ல.
எது எவ்வாறெனினும், நாங்கள் பயங்கரவாதம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் சிறப்பான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதுடன் நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம் என ஊடகபேச்சாளர் கூறினார்.

Related Post