Breaking
Wed. Jun 18th, 2025

ஊடகப் பிரிவு

இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது!
சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது. இந்த இரு தரப்பு உறவுகளும்; தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தெரிவித்தார்.
நேற்று (26) முற்பகல் கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

11025713_1035573499792178_8305058810283630704_n 10547669_1035574059792122_9084241479332916972_n 11018328_1035574239792104_4916292098478332128_n

Related Post